........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-13

பெற்றோரின் அறிவுரைகள் இளம் வயதினரைக்

 கடுப்பேற்றுகிறது! காப்பாற்றுகிறது!!

( தலைப்பு தந்த வாசகர்: மு.ராஜேஸ்வரி, சென்னை-17)

as

கடுப்பேற்றுகிறது!

மொபைலில் கூப்பிட்டு அட்வைஸ்

என்ன செய்றது? இந்தப் பெரிசுங்க அறிவுரை சொல்றேன்கிற பேரில கடுப்பேத்துறது தாங்க முடியலை. அந்தக் காலத்தைப் போல நினைச்சுக்கிட்டு நம்மைப் பாடாப் படுத்துறாங்க... இவங்க தொல்லைக்குப் பயந்தே நான் அடிக்கடி வீட்டுப் பக்கம் போகிறதே இல்லை. இருந்தாலும் மொபைலில் கூப்பிட்டு அட்வைஸ் மழையாக பொழிந்து தள்ளிடுறாங்க...  கல்யாணம் முடிச்சு நமக்குன்னு குழந்தை பிறந்து அப்பா ஆகிட்டாலும் அவங்களுக்கு நம்ம இன்னும் சின்னக் குழந்தையாகவே தெரிகிறோமாம். என்ன செய்றது? கடுப்பேத்தினாலும் என்னைக் கம்ப்யூட்டர் இஞ்சினியராக்கியது அவங்கதானே? பொறுத்துப் போக வேண்டியதுதான். 

-மு.ஆனந்த குமார், பெங்களூர்.

பிள்ளைக‌ள் போக்கினை அறிந்து நடக்கலாம்.

பெற்றோர்க‌ளின் அறிவுரையைக் கேட்டு அத‌ன்ப‌டி ந‌ட‌க்கும் பிள்ளைக‌ளும் இக்கால‌த்தில் இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், இளைஞ‌ர்க‌ளைக் கெடுத்துவ‌ரும் மேனாட்டு நாக‌ரிக‌ மோக‌ம். இச்ச‌முதாய‌த்தையே கெடுத்துவ‌ருவ‌தால், அந்த‌ ந‌ல்ல‌ பிள்ளைக‌ளையும் அது மாற்றிவிடுமோ என்ற‌ அச்ச‌ம் ப‌ல‌ பெற்றோர்க‌ளுக்கு இருக்கிற‌து. ந‌ண்ப‌ர்க‌ள் ந‌டுவில் இருக்கும்போது த‌ன்னை த‌ன‌து பெற்றோர் க‌ண்டிப்ப‌தையும், அறிவுரை கூறுவ‌தையும் இக்கால‌ பிள்ளைக‌ள் வெறுக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் போக்கினை அறிந்து அத‌ன்ப‌டி பெற்றோர் த‌ம் பிள்ளைக‌ளிட‌ம் ந‌ட‌ந்துகொண்டால் இரு த‌ர‌ப்பின‌ருக்கும் ந‌ல்ல‌து.

-கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்பள்ளி.
 

காலத்திற்கேற்ப மாறலாமே?

நாளைய உலகம் இளைய சமுதாயத்தின் கையில் ஆகவே அவர்கள் தானகத் திருந்த வேண்டும். பெற்றோர்களின் அறிவுரை இளையோர்களுக்கு சங்கடத்தையே கொடுக்கிறது. பெற்றோர்கள் அறிவுரை கூறும் போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டும் போதும் அவன் மனதில் ஒரு தாழ்வுநிலை வருகிறது. பெற்றோர்களை விட நண்பர்கள் கூறினால் அது நன்மை அளிக்கும் ஏனென்றால் அவன் பெற்றோர்களிடம் மறைப்பதை நண்பர்களிடம் மட்டுமே சொல்லுகிறான்.

பெற்றோர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்பொழுதும் வாழ்கிறார்கள் அது அவர்களின் தவறு இல்லை. ஆனால் அதே வாழ்வில் பிள்ளைகளை வளர்ப்பது தவறு. பிள்ளைகளை அவர்களின் சுயபுத்தியைப் பயன்படுத்த முதலில் விட வேன்டும். கடந்த காலம் எப்படியோ? ஆனால் இன்றைய காலம் கணினி உலகம். உலகமே மாறும் போது பிள்ளைகளும் அதே உலகத்தை விஞ்ச வேன்டும். அப்பொழுதுதான் தங்களுக்கு எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர் நோக்குகிற தைரியம் வரும் ஆகவே, பெற்றோரின் அறிவுரைகள் இளம் வயதினருக்குத் தேவையற்றது.

-கணோஜன், பாரீஸ், பிரான்சு

 

காப்பாற்றுகிறது!

எனக்கும் பெருமையா இருந்தது.

எனக்கு ஐம்பத்து மூன்று வயதாகிறது. நான்  கல்லூரிக்குப் போகும் போது,  "மற்றவர்களைப் பார்த்து நாமும் அப்படி செய்தால் என்ன? என்று செய்து விடாதே... அவர்கள் ஏதாவது அரசாங்க வேலை பார்க்கிறவங்களோட பிள்ளைகளா இருப்பாங்க... நாம அப்படியில்லை இந்த சின்ன விவசாய நிலத்தை வைத்துப் பிழைப்பவர்கள். உன்னை இந்த பெரிய படிப்பு படிக்க வைக்கிறதுக்கு ஊரிலே பல பேர்கிட்ட கடன் வாங்கிப் படிக்க வைக்கிறேன். நல்லா படிச்சு நம்ம குடும்பம் முன்னுக்கு வரனும்" என்று சொன்ன என் தந்தையின் வார்த்தைகள் என் மனசுக்குள் பதிந்து போயிருந்ததால் எனக்கு படிப்பு முடியும் வரை எனது கவனம் நல்லாப் படிச்சு நாமும் முன்னால் வரவேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.  இன்றும் எங்கள் ஊரில் எனக்கு மட்டுமில்லை எங்கள் குடும்பத்துக்கும் நல்ல பெயரிருக்கிறது. அதற்குப் பிறகு எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் சுந்தரம் போல படிச்சு பெரிய ஆளா வரனும்னு சொல்வாங்களாம். என் அப்பா சாகிற வரை அடிக்கடி சொல்லும் போது அவருக்கு மட்டுமில்லை எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது.

-வி.சுந்தர்ராஜன், மும்பை.

 

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு