........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-14

தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான

தேவைகளே! தோல்விகளே! 

( தலைப்பு தந்த வாசகர்: கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.)

as

தேவைகளே!

அதிக தேவைகள், அதிக தொல்லைகள்.

மனிதனின் ஆசைகள் அதிகரிக்கும் போது அவனுடைய தேவைகளும் அதிகமாகிறது. அதிகமான தேவைகளை நோக்கிச் செல்லும் போது ஏற்படும் தடைகளை உடைக்க எந்தத் தவறையும் செய்யத் துணியும் மனிதன் அந்தத்தவறு வெளியில் தெரியவரும் பொழுது  அதை நினைத்து வெட்கப்படுகிறான், வேதனைப்படுகிறான். முடிவில் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வது என்கிற முடிவில் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறான்.  அதிகமான தேவைகள், அதிகமான தொல்லைகள் என்பதை உணராதவர்கள்தான் அதிகமாகத் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். 

-எஸ்.கார்த்திகேயன், துபாய்.

தேவையில்லாத ஒப்பீடும் அதன் தேவைகளும்

தற்கொலைக்கு முதல் காரணம் தேவைகள் தான். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திறமைகள் இருக்கும். அந்த திறமையை வெளிக்கொணர முடியாமல் மற்றவர்களின் திறமையை அல்லது அந்தஸ்தை ஒப்பீடு செய்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் படிக்காமல் வாழ்கையில் தனக்கு என்ன திறமையோ அதைக்கொண்டு முன்னேறி இருக்கலாம். இதை பார்த்த மற்றொருவர் இவன் படிக்காமலே இவ்வளவு தூரம் வந்து இருக்காரே. ஏன் நாம நிறைய படிச்சு இருக்கோம். இவன விட இன்னும் ஒருபடி மேலேயே வரணும்னு ஒப்பிட்டு பார்த்து தன் சக்திக்கு மீறி தேவைகளை அதிகரித்து கொள்கிறார்கள். யார் எந்த துறையில் சிறந்து விளங்கினாலும், அது மாணவ, மாணவிகளாக இருந்தாலும், அல்லது பெரியவர்களாக இருந்தாலும் ஒப்பிடுதல் என்பது அறவே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நம் திறமைகளை வெளியே கொண்டு வரமுடியாது. மற்றவர்களுடைய திறமையைப் பார்த்து பொறமைப்படுவது மட்டுமல்லாமல், ஒப்பிட்டு பார்த்து அதனை அடைய முயற்சி என்ற பெயரில் தேவைகளை பெருக்கி, நமக்கு நாமே தற்கொலை என்ற பெயரில் குழி வெட்டிக் கொள்கிறோம். நமக்கு எது தேவையோ அதைவைத்து வாழ வேண்டும். இயற்கை நமக்கு எவ்வளவோ பாடத்தை தினமும் கற்றுக் கொடுக்கிறது. எனவே முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். 

- சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

தோல்விகளே!

மாற்று வழிகளைத் தேட வேண்டும்.

வாழ்க்கையில் பல முயற்சிகள் செய்தும் அதில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் சிலர் வாழ்க்கையில் விரக்தி அடைகின்றனர். தங்கள் இயலாமையை நினைத்து தற்கொலை முயற்சிக்கும் செல்கின்றனர்.  இந்தியத் தண்டனைச் சட்டம் 309வது பிரிவு தற்கொலை முயற்சியை சட்டவிரோதமாகக் கருதி இதற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கிறது. இருந்தாலும் தற்கொலை முயற்சிகள் குறைவதாக இல்லை. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 13 பேர்கள் தற்கொலை செய்கின்றனர். வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தவர்களுக்கு கடைசியாக எடுத்த தற்கொலை முயற்சியும் தோல்வியடையும் போது அவர்களுக்கு தண்டனை என்பது அவர்களை மேலும் பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு தகுந்த உளவியல் சிகிச்சை அளித்தால் நன்றாக இருக்கும். இதை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்று வழிகளைத் தேட வேண்டும்.

-உ. சரவண சுப்பையா, கோயம்புத்தூர்.

கற்பித்தல் இல்லை.

இப்போதுள்ள கல்வித் திட்டங்கள் எதுவும் வாழ்க்கையில் தோல்விகளை, சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி கற்றுக் கொடுப்பதே இல்லை. தவிர, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் தங்களது பங்குக்கு சிறு சிறு தோல்விகளுக்குக் கூட தற்கொலையே தீர்வு என்பது போல காண்பித்து எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் (தூக்குக் கயிறு, மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு எரிந்து விடுவது) என்று அதிகமாகக் காண்பிக்கின்றன. சிறு சிறு தோல்விகளைக் கூட சமாளிக்கத் தெரியாத கோழைகளாகி விடுவதே தற்கொலைக்குக் காரணம்.

- டி.எஸ்.ஜம்புநாதன், ஊர் பெயரில்லை.

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு