........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-5

தேவைக்கு அதிகமான பணம் தேடுபவர்களின் வாழ்க்கை

தவிக்கிறது!     தொலைகிறது!

 ( தலைப்பு தந்த வாசகர்: கே.செல்வலட்சுமி, பொன்னமராவதி)

as

தவிக்கிறது!

பணத்தாசையைத் தவிர்க்க வேண்டும்.

திரை கடலோடியும் திரவியம் தேடு என்று பெரியவர்கள் சொன்னார்கள். நாங்களும் நம் சொந்த நாட்டையும் சொந்தங்களையும் விட்டு இங்கு வந்து கஷ்டப்படுகிறோம். தேவைக்கு அதிகமாக என்ன? தேவைக்காகவே நாங்கள் இங்கு தினசரி பதினைந்து மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் எங்களைப் பிரிந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிப்புகள் தகர்க்க குடும்பத்தினர் அதிகமான பணத்தாசையைத் தவிர்க்க வேண்டும்.

-உ.அருண்குமார், துபாய்.

தொலைகிறது!

விடாத ஆசை... விடுவதற்கு மனசில்லை.

 ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமாயிருந்தால் கடைசி வரிசை இடம் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறோம். கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் முன் வரிசையில் இடம் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். முன் வரிசையில் இருப்பவர்கள் சன்னலோரம் இடமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினக்கிறார்கள். வசதியான இடம் கிடைத்தாலும் ரயிலில் சென்றிருக்கலாம் என்று எண்ணுகிறார்கள். ரயிலிலும் படுக்கை வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள். அங்கு வசதியாய் பயணம் செய்பவர்கள் விமானத்தில் பயணம் செய்தால் நல்லாயிருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படித்தான் பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை... விடாத ஆசை... விரட்டுகிறது... விட மனமில்லை... மனத்தில் நிம்மதியில்லை. இருப்பதையும் விட்டு விட்டு வாழ்க்கையைத் தொலைந்து வருந்துகிறோம்.

-தூத்துக்குடி பாலு, கோவில்பட்டி.

 

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு