|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
|
|
|
a |
|
|
விவாதக்களம்-6 வாழ்க்கை என்பது ஒரு நிரந்தரமான போராட்டக்களமே! பொழுதுபோக்குத் தளமே!! ( தலைப்பு தந்த வாசகர்: ஆர்.கருணாகரன், அருப்புக்கோட்டை)
|
|
|
as |
|
போராட்டக்களமே! வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே... மனிதர்களாய் பிறந்து விட்ட நமக்கு உறவுகளும் இந்த உறவுகளால் வரும் தொடர்புகளும் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை போராட வைக்கின்றன. நாம் எப்படியாவது முன்னால் வந்து விட வேண்டும் என்று இந்தப் போராட்டக்களத்தில் பலரும் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இதில் வெற்றியடையா விட்டாலும் பரவாயில்லை வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
- ஆர். சுந்தரமூர்த்தி, உறையூர், திருச்சி. போரட்டமில்லாத வாழ்க்கை வாழ்க்கையில் எதற்கும் நாம் போராடத்தான் வேண்டும். எந்த செயலிலும் போராட்டம்தான் வெற்றியைத் தேடித் தரும். போராடினால்தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். நம்முடைய போராட்டம் நம்முடைய இறப்பிற்குப் பின்பும் நம்மை அதிகமான காலத்திற்கு ஞாபகத்தில் வைத்திருக்கும். போரட்டமில்லாத வாழ்க்கை பயனற்றது. ஏதோ பேருக்குப் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதை விட வாழ்க்கையில் வரும் போராட்டங்களைச் சந்தித்து வாழ்க்கையில் நமக்கென்று ஒரு சிறப்பான இடம் பெற முன் வர வேண்டும்.
- இ.அருணாசலம், விசாகப்பட்டிணம்.
|
பொழுதுபோக்குத் தளமே! வாழ்க்கைப் பொழுதை மகிழ்ச்சியோடு.
பிறக்கும் போது நாம் எதையும் கொண்டு
வரவில்லை. இறக்கும் போதும் நாம் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. எனவே இந்த
பிறப்பு இறப்புக்கு இடைப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கத்
தெரியாதவர்கள்தான் வாழ்க்கையோடு போராடுகிறார்கள். இந்த வாழ்க்கையில்தான்
தேவையில்லாமல் எத்தனை போட்டிகள்? இந்த போட்டியால் எத்தனை துன்பங்கள்? நமக்குக்
கிடைத்த இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும். அதற்கான சூழலை
உருவாக்கிக் கொள்வோம். போட்டியில்லாத நிலையை நமக்குள் உருவாக்கிக் கொள்வோம்.
இந்த மனித வாழ்க்கைப் பொழுதை மகிழ்ச்சியோடு போக்குவோம். - ஏ. ஆர். எஸ். செந்திக்குமாரவேல், விருதுநகர். போராட்டம் தேவையில்லை... வாழ்க்கையை நாம் ஒரு பொழுதுபோக்காகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையில் சுகதுக்கங்கள் இருக்கும். இந்த சுகதுக்கங்களை நாம் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கடத்திச் செல்ல வேண்டுமே தவிர இதற்காக நாம் போராட வேண்டியதில்லை. போராட்டம் என்பது வாழ்க்கைக்குத் தேவையில்லை. வாழ்க்கை மன திருப்தியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த மன திருப்திக்கு பணம் தேவையில்லை. எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மைதான் தேவை.
-ஆர்.ஜெயலட்சுமி , நாகப்பட்டினம். |
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |