|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
விவாதக்களம்-7 பெண்கள் இன்று வாழ்க்கையில் தனித்து நிற்கிறார்கள்! தவித்து நிற்கிறார்கள்! ( தலைப்பு தந்த வாசகர்: எஸ். ஹேமலதா, ஈரோடு)
|
|
|
as |
|
தனித்து நிற்கிறார்கள்! ஆண்களுக்கு இணையாக தனித்து... சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு, ஆண்களிடம் அடங்கிப் போய்க் கிடந்த அந்தக் காலம் இன்று முற்றிலும் மாறிப் போய்விட்டது. இன்றைய பெண்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்துடன் ஆண்களுக்கு இணையாகத் தனித்து நிற்கத் துவங்கி விட்டார்கள். அடுப்படியில் முடங்கிக் கிடந்த நிலை மாறி, இன்று சுனிதா வில்லியம்ஸ் என்கிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விண்வெளியில் பயணித்து விண்வெளி ஆய்வுகள் செய்து திரும்பியிருக்கிறார். அவர் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்ட முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். பெண் என்று எவரும் அவரைத் தாழ்த்திப் பேசவில்லை, மாறாக அவரை இந்த மனித சமுதாயம் பாராட்டி மகிழ்கிறது. இன்று பெண்கள் தனித்து நிற்கிறார்கள். தனித்துவத்துடன் நிற்பார்கள்.
-வள்ளியம்மை நாச்சியப்பன், புதுக்கோட்டை. பெண்களுக்கு சட்டப்பூர்வமாக... இன்றைய பெண்கள் தங்கள் வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும் தனித்து நிற்கிறார்கள் என்பது நூறு சதவிகித உண்மையான கருத்து. பெண்களின் கடந்த கால நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை தெரியும். தன்னையும் தன் சுகத்தையும் விட்டுக் கொடுத்து குடும்ப பாரத்தைச் சுமந்து, ஆண்களின் கட்டுப்பாட்டில் அடங்கி, அவர்களின் விருப்பங்களுக்கும் வெறுப்புகளுக்கும் இணங்கி, ஒடுங்கிக் கிடந்த காலம் இன்று போயேபோய் விட்டது. இன்று பெண்களுக்கு சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு தனித்து நிற்கிறார்கள்.
-இந்திரா பழனிச்சாமி, சத்தியமங்கலம்.
|
தவித்து நிற்கிறார்கள்! வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி...
அன்றைய பெண்ணடிமை முறைகளை இன்றைய சமுதாயம்
முற்றிலும் மாற்றி பெண்களுக்கும் சமத்துவம் அளிக்கத் துவங்கி விட்டது. இன்று
பெண்கள் அனத்து வழிகளிலும் ஆணுக்கு நிகரான அந்தஸ்துடன் வந்து
கொண்டிருக்கிறார்கள். இந்த சமத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்ட சில பெண்கள்
தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான கட்டுப்பாடுகளை தொலைத்து விட்டு வாழ்க்கையை
இழந்து போயிருக்கிறார்கள். இந்த இழப்புகள் அவர்கள் அறியாமையால் வந்தது
என்பதையும் தற்போது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை நடைமுறைகளை
மாற்றிப் பார்ப்போம் என்று தங்களது வாழ்க்கைப் பாதையைத் தவறாக்கிக் கொண்டு
தவித்தும் வருகிறார்கள். இந்த தவறான நிலை மட்டும் தவிர்க்கப் பட்டால் பெண்களின்
வாழ்க்கை மகிழ்ச்சிப்பாதையில் பயணிக்கும். - சுபா வடிவேல், சென்னை-14. பாடப் புத்தகங்களுடன் மாரடிப்பு...? பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடப் புத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்து விட்டு நடைமுறையில் பெற்றோர் படுத்தும்பாடு. வேலைக்குச் சென்றால் அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகள் என்று பலதிசைகளில் இன்றும் பெண்களுக்கு வாழ்க்கை ஒரே தவிப்புதான். இந்த தவிப்பில் இருந்து அவர்களுக்கு உண்மையான விடுதலை என்னவோ கேள்விக்குறிதான்.
-வே.ராஜரத்தினம், காட்பாடி. |
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.