........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-8

இன்று வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பவர்கள்

ஏற்றமடைகிறார்கள்!  ஏமாற்றமடைகிறார்கள்!!

( தலைப்பு தந்த வாசகர்: தா.அன்பரசன், சிதம்பரம்)

as

ஏற்றமடைகிறார்கள்!

நம்மால் இயன்றவரை நல்லது செய்ய...

நல்லவர்கள் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்களது நிலையில் அவர்கள் எப்போதும் மாறுவதில்லை. நல்லவர்களைப் போல் நடிப்பவர்கள்தான் இன்று அடிக்கடி மாறிக்கொள்வதுடன் தங்களுடைய லாபத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு செயல் படுகின்றனர். நல்லவர்களிடம் பணம் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு நண்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் மூலம் நிறைய உதவிகள் நல்லவர்களுக்குக் கிடைக்கத்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஏற்றம் என்பது பணத்தில் இல்லை. பணம் என்பது வாழ்க்கையில் பல சங்கடங்களைத்தான் உருவாக்குமே தவிர சந்தோஷங்களைத் தராது. நம்மால் இயன்றவரை நல்லது செய்ய வேண்டும். எல்லோரும் சொல்லும்படி நல்லவராய் நடந்து வாழ்க்கையில் நல்லவர் என்று பெயர் பெற வேண்டும். நல்லவர்கள்தான் வாழ்க்கையில் ஏற்றமடைகிறார்கள்.

-இ.பேச்சிமுத்து, மதுரை.

 

ஏமாற்றமடைகிறார்கள்!!

வாழ்க்கையில் ஏமாற்றம் நிச்சயம்...

 வாழ்க்கையில் நல்லது செய்யனும்னு நினைத்திட்டாலே கஷ்டப்பட்டுத்தான் ஆகனும். இந்தக் காலத்திலே மட்டுமில்லே, அந்தக் காலத்திலிருந்தே இது வழக்கமாகத் தானிருக்கிறது. புராணங்களில் கூட, நல்லவர்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி போரட்டத்துடனே போகிறது. நல்லவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக் கடைசியில் அவர்கள் கொள்கை மட்டும் காப்பாற்றப்படுகிறது. ஆனால், கெட்டவர்கள் வாழ்க்கை பெரும்பகுதி சந்தோஷமாகவும் குறுகிய காலம் மட்டுமே அவர்களுக்கு கஷ்டமாகவும், கடைசியில் அவர்கள் அழிவதாகவும் இருக்கிறது. நல்லவர்களாக வாழ்வது கஷ்டம். நல்லவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் என்பது மட்டும் நிச்சயம்.

-எஸ்.சுந்தரமூர்த்தி, கும்பகோணம்.

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு