........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-9

வாழ்க்கைக்கு வழிகாட்டுவது நம் முன்னோரின்
அறிவுரைகளே...! அனுபவங்களே...!

(தலைப்பு தந்த வாசகர்: து.தேவபிச்சை, நாசரேத்)

as

அறிவுரைகளே...! 

வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அறிவுரைகள்

நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? நம் வாழ்க்கை சிறப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுவது நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள ஆன்மீக வழியிலான, பக்தி அடிப்படையிலான கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும்தான். இவற்றில் பெரும்பாலும் இருப்பது நம் முன்னோர்களின் அறிவுரைகள்தான். இந்த அறிவுரைகள் சில நம்முடைய தற்போதைய வாழ்க்கைக்கு ஒத்து வராது இருந்தாலும் பெரும்பானமையான கருத்துக்கள் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கும். இந்த அறிவுரைகளை ஜாதி, மத, இன அடிப்படையில் பார்க்காமல் நமக்கு சரியாகப்படுவதை எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. முன்னோரின் அறிவுரைகள் மட்டுமில்லை, நல்லோரின் எல்லா அறிவுரைகளும் வாழ்க்கைக்கு ஒளியூட்டுவதுதான்.

-பா. நாராயண வடிவு, கோவில்பட்டி.

 

அனுபவங்களே...!

அனுபவங்கள் மறக்க முடியாதது...

முன்னோர்களின் அனுபவங்கள் என்று நம்மிடம் சொல்லும் போது அவர்களை ஏளனமாகப் பார்க்கும் நாம் தமக்கென்று ஏதாவது வரும் போதும், வந்த பின்பும்தான் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதற்குப் பின்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அனுபவங்கள் மறக்க முடியாததாகி விடுகிறது. நம் நல்ல அனுபவங்கள் நமக்கு வழி காட்டுவதுடன் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உதவுகிறது. நாம் ஒன்றைச் செய்து அதில் எதிர்பாராத சம்பவங்கள் வந்த பின்பு, நமக்கு எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற நல்ல பாடமும் கிடைக்கிறது. வாழ்க்கையில் அனுபவங்கள்தான் பாடம் புகட்டுகின்றன.

-எஸ்.சுந்தரமூர்த்தி, கும்பகோணம்.

அர்த்தமுள்ள வார்த்தைகள்

ஒவ்வொருவரின் அனுபவங்களும் வாழ்க்கைக்கு உதவும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களையும், அதனால் வந்த நன்மை, தீமைகளையும் புராணங்களாகவும், காவியங்களாகவும் எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள். இதிகாசங்கள், புராணங்கள், பொதுமறை நூல்கள் எல்லாம் நமக்கு, வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவவே இருக்கிறது. நம் முன்னோர்கள் எழுதி வைத்த இந்த நூல்கள் காலங்கள் பல கடந்து போய் விட்டாலும் இன்னும் மறையாமல் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பது எப்படி? நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாயிருப்பது எப்படி? அதிலிருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகள்தான்.

-சாந்தி சரவணன், கோயம்புத்தூர்.

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு