........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொகைக் கதைகள்-4 உருக்குலைந்த உறவு! -முனைவர். மா. தியாகராஜன்.
மலை மீது அமைந்த ஒரு கிராமம்! நள்ளிரவு நேரம். ஊரே உறங்கிக் கிடக்கிறது! ஒருவன் மட்டும் உறங்காமல், அரவம் எதுவும் இல்லாமல், ஒதுங்கி ஒதுங்கி, பதுங்கிப் பதுங்கி, பையப் பைய நடந்து, ஊரைக் கடந்து ஒதுக்குப் புறமாய் உள்ள ஓடைக்கரை ஒன்றுக்கு வந்தான்.
ஆம்! அந்த இடம் தான் அவனும் அவன் காதலியும் இரவு நேரங்களில்
சந்தித்து இன்பம் பெறும் தளம் ஆகும் - இரவுக் குறிக்கான இடம் ஆகும். ஆனால்...? அன்று தோழி மட்டும் அந்த இடத்திலே இருந்தாள்! அன்புக் காதலியைக் காண்கின்ற ஆவலிலே வந்த அவன் காதலியைக் காணாது கலங்கி நின்றான் - தோழி மட்டும் நிற்பதைக் கண்டு துவண்டு நின்றான். “தோழி! தலைவி எங்கே? ஏன் நீ மட்டும் இங்கு நிற்கிறாய்? அவள் எங்கே இருக்கிறாள்? ஒரு வேளை ஒளிந்து கொண்டு வேடிக்கை காட்டுறாளா? வெளியே வரச் சொல்! நான் பல இடையூறுகளைக் கடந்து எவ்வளவு ஆவலுடன் இங்கே வந்துள்ளேன்! அவளை இங்கே அழைப்பாயாக!” என்று படபடவெனப் பேசினான். அத்தனையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் நின்ற தோழி, “தலைவா! மன்னிக்கவும்! நடந்ததைக் கூறுவதற்குத் தயக்கமாக... உள்ளது...!” “என்ன? என்ன? ஏன் தயக்கம்? தயங்காமல் கூறு” என்று அச்சத்துடன் - நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டதோ என்ற கலக்கத்துடன் கேட்டான். “தலைவா! தலைவியை அவளுடைய பெற்றோர்கள் இரவு நேரங்களில் எங்கும் செல்லக் கூடாது எனத் தடை பிறப்பித்து உள்ளனர். காவலும் கடுமையாக இடப்பட்டுள்ளது. அதாவது இற்செறிக்கப்பட்டுள்ளாள். அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. “தங்கள் மீதும் ஒரு குறை உள்ளது!” “என்ன என் மீதா? என்ன குறை? சொல்!” “இப்படி இரவு நேரங்களில் அவளைச் சந்தித்து இன்பம் காண்பதிலேயேதான் காலத்தைக் கழிக்க நினைக்கிறீர்! எப்பொழுதும் பிரியாமல் இருக்கக் கூடி திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறீர். எனவே, இனிமேல் இரவு குறியாமல் - இரவு நேரங்களில் இந்த ஓடைக்கரையில் அவளைத் தாங்கள் சந்திக்க இயலாது. அவள் வர மாட்டாள். இனியாவது மணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!” தோழி உள்ள நிலையை - தலைவியின் உள்ள நிலையைப் பக்குவமாய்ப் பகர்ந்தாள். இதனைக் கேட்டு இடிந்து போன தலைவன் சோர்ந்து போன முகத்துடன், சோகம் தோய்ந்த முகத்துடன் - தளர்ந்து போன நடையுடன் திரும்பினான். திரும்புகிறவன் மனம் நொந்து, தனக்குத்தானே பலவாறு புலம்பிக் கொண்டே வந்தான். “ஏ! மனமே! இன்று உனக்கு ஏற்பட்ட சோதனையைப் பார்த்தாயா?” இரவுக் குறிக்கு வருகிறேன் - வர உடன்படுகிறேன் என்று இனிய நல்ல சொற்களைக் கூறாமல், வரமாட்டேன் - வர உடன் பட மாட்டேன் என்னும் தீய சொற்களைத் தலைவியின் தோழி கூறி விட்டாளே! அந்தச் சொற்களை இன்று நீ கேட்க வேண்டியது ஆயிற்றே! இரவுக் குறிக்கு உடன்படத் தலைவி மறுத்துவிட்டாளே! தகுமா இது? பச்சை மண்ணால் செய்து வேக வைக்கப்படாத மண்பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்? மழையை எதிர்க்க முடியாத - மழை நீரில் கரைந்து போகக் கூடிய பச்சை மண் பாண்டம் போல் உன்னால் அடைய முடியாத ஆசையை உள்ளத்தில் உண்டாக்கி வளர்த்துக் கொண்டாய் - உன்னால் பெற முடியாத ஒன்றைப் பெற முனைந்தாய் - தாங்கிக் கொள்ள முடியாத ஆர்வத்தை உருவாக்கி வைத்தாய்! வேக வைக்கப்படாத பச்சை மண் பாண்டம்! அதற்குள் தண்ணீரை ஊற்றினாலே போதும். அது தாங்கிக் கொள்ளாது - சிதைந்து போகும். அப்படிப் பட்ட பசு மண் பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்? அதைப்போல், இரவுக் குறிச் சந்திப்புக்கும் பகல் குறிச் சந்திப்புக்கும் ஏற்பட்ட இடையூறையே தாங்கிக் கொள்ள முடியாத நீ கூடவே இல்லாத - சந்திப்பே இல்லாத - குறிமறுப்பை எப்படித் தாங்கிக் கொள்வாய்?
உயர்ந்த மரக்கிளை! அந்த மரக்கிளையில் ஒரு மந்தி! குட்டி தன்னைக்
கவ்விக் கொள்ள அதனையும் தாங்கிக் கொண்டே வலிமையுடன் செல்லும்! அந்த மந்தியைப் போல்
அன்புடன் உன்னை அரவணைத்துக் கொள்ள யாருமே இல்லையே! - ஆறுதல் சொல்ல ஆதரவு காட்ட
யாருமே இல்லையே! ஆனால், அப்படிப்பட்டவர் தாம் யாருமே இப்பொழுது இல்லையே! எனவே நீ புலம்புவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? ஆகவே உன் புலம்பல் வீணானதுதான். எனவே புலம்பாதே! தனியே தலைவி இருக்கிறாளே, அவள் கல் நெஞ்சக்காரி! நீ ஆறுதல் பெறாமைக்கு - அமைதி பெறாமைக்குக் காரணம் அவளுடைய கல் நெஞ்சமே ஆகும். காக்க வேண்டிய குட்டியைத் தாங்கி உள்ள மந்தியானது அதற்காக மரத்தை மிக உறுதியாகப் பற்றித் தழுவுவது போல் - தாவுவது போல் போற்ற வேண்டிய அன்பினைப் பெற்றுள்ள தலைவி என்னைச் சேர்ந்திருந்தால் தானே என் துயர் தீரும்! அப்படி அவள் இல்லையே! ஆகவே நீ வீணே புலம்புவதால் எப்பயனும் இல்லை! என்று தன்னிரக்க உரையாக, தனக்குத்தானே புலம்பிக் கொண்டு, தன்னையே தேற்றிக் கொண்டு சென்றான்.
“நல்உரை இகந்து, புல்உரை தா அய்,
|
முகப்பு |