........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
a |
குறுந்தொகைக் கதைகள்-4 குறத்தி மலைக் கள்வன் -முனைவர். மா. தியாகராஜன்.
அது ஒரு மலைக் கிராமம்! சுற்றிலும் மலைகள்; அவற்றின் முகடுகளைச் சூழ்ந்து படரும் மேகக் கூட்டங்கள்; வளைந்து நெளிந்து ஓடும் வற்றாத ஆறுகள்; மணம் பரப்பும் மலர்கள் இனம் இனமாய்ப் பூத்துக் குலுங்கின்றன; வண்டினங்கள் அவற்றை வட்டமிட்டுப் பாடும் ரீங்கார ஓலி, வானத்தில் பறந்து திரியும் வகை வகையான பறவைகளின் பாட்டு ஒலி ஆகியன எங்கும் எதிரொலித்துக் கொண்டுள்ள வளமான கிராமம்! இயற்கைத் தேவதை இன்புற்று எழுந்தருளியிருக்கும் இனிய ஊர்!
மலர்விழி!
அந்த மங்கையின் பெயர்! அது முதல் இருவருடைய சந்திப்புக்கும் அந்தத் தினைப் புனம் களம் ஆயிற்று. பகல் எல்லாம் சந்திப்பு! இரவெல்லாம் பெருமூச்சு! இப்படியே நாள்கள் பல கழிந்தன! ஒரு நாள்! புனத்தை ஒட்டிப் புனல் ஓடை ஒன்று! மலர்விழியின் மடியிலே கண்ணன் - கண்ணனின் அணைப்பிலே மலர்விழி! - தினைப் புனமோ குருவிக் கூட்டங்களின் வேட்டைக்காடு! இந்தச் சமயத்தில் தினைப்புனத்தைப் பார்க்கத் தந்தை அங்கே வந்தார்! தந்தை வருவதைத் தோழி குறிப்பாள் தெரிவித்தாள். மலர்விழியும் அதை உணர்ந்து ஓடையிலிருந்து ஓடோடி வந்தாள்! ஆனால் அவளுடைய கலைந்த கூந்தல், கலைந்த ஆடை அகியவற்றைக் கண்டு ஓரளவு தந்தை ஊகித்துக் கொண்டார்.
மறுநாளிலிருந்து புனம் காக்கப் போக வேண்டாம் என்று தந்தை
கட்டளையிட்டார். இதனால் பகல் பொழுதில் நடைபெற்ற சந்திப்பு நடைபெற்ற சந்திப்பு
தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே தோழி தேன்மொழியின் துணையுடன் இரவு நேரங்களில்
சந்திப்பு நடைபெற்றது. தோட்டத்திற்குள்ளே வந்த கண்ணன் கல் ஒன்றை எடுப்பான் - மரம் ஒன்றின் மீது எறிவான் - கல்பட்ட உடனே கண் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் பறவையினங்கள் விழித்துக்கொள்ளும்; ஏதோ ஆபத்து என்று எண்ணி “கீச்கீச்” என்று அச்சத்தால் குரல் எழுப்பும். குருவிகளின் குரல் கேட்டு மலர்விழி, கண்ணன் அங்கே வந்துள்ளதை உணர்ந்து, மெல்ல எழுந்து, மெதுவாகக் கதவைத் திறந்து, பையவே அடி வைத்து நடந்து தோட்டத்திற்குச் செல்வாள். அங்கே அவர்கள் சந்திப்பு! விடியும் வரை சந்திப்பு! தோழி துணை புரிவாள்!
ஒரு நாள்! அப்பொழுது...? தற்செயலாக விழித்தார் தந்தை! கிணற்றடியில் சப்தம் கேட்டு வெளியே வந்தார்! தந்தை வெளியே வருவதைத் தோழி தெரிவிக்க, விரைந்து மலர்விழி வீட்டிற்குள்ளே வந்துவிட்டாள் - தந்தையிடம் ஏதோ சாக்குச் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
ஆனால், தந்தையோ அவள் நிலை கண்டு உண்மையை உணர்ந்து கொண்டார்.
மலர்விழி வீட்டை விட்டும் வெளியே செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார் -
கட்டுப்பாடு விதித்தார் - வீட்டிற்குள்ளேயே வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து
கொடுத்தார். அதனால் இரவுச் சந்திப்பும் தடுக்கப்பட்டு விட்டது - தலைவி
இல்லத்திற்குள்ளே முடக்கி வைக்கப்பட்டாள் இற்செறிக்கப்பட்டாள். கட்டுவச்சியைப் பார்த்தாள் - அவளோ முதியவள்! அவளுடைய கூந்தலைப் பார்த்தாள் - அடர்ந்து இருந்தது; அலை அலையாய்ச் சுருண்டு கிடந்தது; வெண்மையான சங்குகளைக் கோர்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் நரைத்து இருந்தது.
அவள் குறி சொல்லத் தொடங்கினாள். ஒரு கட்டுவச்சி குறி சொல்லத்
தொடங்கும் முன் அவளுடைய மலையின் பெயரைக் கூறி, அதன் வளத்தைப் பாடி முடித்த பின்னரே
குறி சொல்வது வழக்கம்.
கூறு! இன்னொரு முறை கூறு! இப்பொழுது கூறினாயே ஒரு மலையின் பெயரை -
அந்தப் பெயரை இன்றும் ஒரு முறை கூறு! அப்பெயரைக் கேட்கக் கேட்க இதயம் எல்லாம்
இனிக்கிறதே! எங்கே கூறு! அப்பெயர் எனக்கு இன்பத்தைத் தருகிறது. என் தலைவியாகிய
இவளுக்கும் இனிமையைத் தருகிறது. எனவே, அந்த இனிய மலையின் பெயரை இன்னும் ஒரு முறை
கூறு! கூறு! கூறிக் கொண்டே இரு!” என்று மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கரை புரண்டு
ஓடக் கூறிக் குதித்தாள் களிப்பால்.
“அகவன் மகளே! அகவன் மகளே!
|
முகப்பு |