|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
a |
|
தொடர் கட்டுரை-1. பகுதி-50
நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
50. விடாமுயற்சியுடன் தேடுங்கள்
இன்றைய கால ஓட்டத்தில் பலருக்கும் எதையும் தேடிப் போய்ப் பெறுவதில் விருப்பமில்லை. அவர்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. இதனாலேயே பலருக்கும் நல்ல நிலை கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செயலில் சிறு முயற்சியுடன் இறங்கினாலும் அதன் தொடர்ச்சியைக் கண்டு பயந்து பின் வாங்கி விடுகின்றனர் அல்லது நமக்குக் கிடைத்தது அவ்வளவுதான் என்கிற எண்ணத்துடன் முடங்கிப் போய் விடுகின்றனர். நாம் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமில்லை, அந்தச் செயலுக்கான விடாமுயற்சியும் உடனிருக்க வேண்டும். நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றத் தேவையான ஒவ்வொரு முயற்சியும் அதை அடைவதற்கான அடுத்த வழியை நமக்குக் காண்பித்துக் கொண்டுதானிருக்கும். முடிவில் நமக்கு வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் நல்ல பெயர் வாங்குவதும் இப்படித்தான். எல்லோரிடமும் நாம் நல்ல பெயர் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு முடங்கி விடாமல், அதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் நமக்கும் நல்ல பெயர் கிடைப்பதும் நிச்சயம். ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சிக் காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் தலைவன் கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் அவனிடம் சென்று என்னவென்று கேட்ட போது "உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு" என்றான் அவன்'. மன்னன் அவனிடம் காரணம் கேட்டான். "நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்தக் கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்" என்று பதில் வந்தது. "இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான்.
தலைவனும்
யோசித்தபடி பிறகு, "மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன்
பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப்படும்" என்று
சொன்னது. பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான்.
அவரிடம் "ஐயா!
உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?'
என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய
கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ஆனால்
அவர், "வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில்
தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்"என்று
சொல்லி விட்டார். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே "ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன" என்று சொன்னது. அப்போது மன்னன் "நான்தான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்" என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் "கதை
அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத்
தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில்
மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக்
கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து
நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த
ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே
குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல
உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன" என்றது. இந்தக் கதையில் வரும் மன்னனைப் போல் நாம் செய்யும் செயல்கள் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்கிற நம்பிக்கையுடன், நாமும் நல்ல செயல்களை மட்டும் செய்து, நல்ல பெயரைப் பெற முயற்சிப்போம். வாருங்கள். நல்ல பெயர் வாங்கலாம். வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம். (நிறைவடைந்தது.)
|
| முகப்பு |