........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 198

இலங்கையே தமிழ் ஈழம்தான்!

பாரதி வந்தான்...!
நல்ல பாட்டுக்களைத் தந்தான்!!
புத்தனும் வந்தான்!
புதிய போதனைகளைத் தந்தான்!!
எவனெவனோ வந்தான்...?
சாதி மத இனவெறியைத் தூண்டி
சண்டைகளையும் சாவுகளையும் தந்தான்!! 

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!! 
வாயாரப் புகழ்ந்த தமிழனின்
பிணங்கள் பார்க்கும் இடமெல்லாம்
தமிழ் ஈழத்தில்..!

யார் கொடுத்த தைரியத்தில்
சிங்களன் தமிழனைக்
கொன்று குவிக்கின்றான்
அங்கே சிந்தும் என் தமிழினத்தின்
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
சிங்களனே நீ பதில் சொல்ல வேண்டும்!!

தமிழ் இனத்தை அழிக்க 
உனக்கு யார் தந்த அதிகாரம்...?
ஈழத்தழிழனையும் தழிழையும் நினைத்துத்
துடிக்கிறது எங்களின் இதயம்!

தமிழனுக்கும் தமிழுக்கும்  இழுக்கென்றால்
சும்மா விடமாட்டோம் உன்னை...!
இந்த இனவெறித் தாக்குதலை
இனியாவது நிறுத்திவிடு!!

தமிழினம் ஒன்று சேர்ந்து விட்டால்
இலங்கையில் தமிழ் ஈழமில்லை
இலங்கையே இனி தமிழ் ஈழம்தான்
!!

-த.சத்யா, ராஜபாளையம்.

 
m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.