........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:20

உண்மையின் விலை என்ன?

உரக்கத் தான் கேட்கின்றேன்...
உங்களைத் தான் கேட்கின்றேன்...
உண்மையின் விலை என்ன?

ஓலைக்குடிசையின் வாசலிலே
ஓசையற்ற இதயங்களின் ஓலத்திலே
ஒளிந்திருக்கும் சோக இழைகளினூடாக
ஒரேயொரு கேள்வி கேட்கின்றேன்...
உண்மையின் விலை என்ன ?

குப்பி விளக்கின் வெளிச்சத்திலே
கும்மிருட்டை கலைத்து எம்மினத்தை
விடியலுக்குள் இழுத்துச் செல்ல
விரும்பிக் கேட்கின்றேன்...
உண்மையின் விலை என்ன ?

ஏழையின் சிரிப்பில் இறைவன்
என்றொரு தலைவன் பகன்றான்
எத்தனை ஆண்டுகள் சிரித்தும்
ஏனின்னும் வரவில்லை ஆண்டவன் ?

உஷ்....
உண்மையின் விலை என்ன ?

பெண்களின் விடுதலை வேண்டியே
பெரியதோர் கவிஞன் பாடினான்
பசியின் சிறையிலே வாடிடும் பேதையர்
பார்ப்பது விடுதலை எப்போது ?

உங்களைத்தான் ......
உண்மையின் விலை என்ன ?

சுதந்திரம் என்றோர் வார்த்தையை
சிறையிலே பூட்டினர் தலைவர்கள்
நிரந்தரம் வறுமை எம் வாழ்விலே
நிச்சயம் செய்வதே அரசியல்

மெதுவாய்க் கேட்கின்றேன்
மேன்மையாளர்களே .....
உண்மையின் விலை என்ன ?

உண்மையின் விலை தேடி
உலகத்தின் விளிம்பிலே.......

ஓ........
அதோ...
அங்கே.......
பணக்காரன் பையினிலே
பதுக்குகின்றானே ......
அதுதான் உண்மையோ?

சரி வாருங்கள்
அவனிடமே கேட்போம்
உண்மையின் விலை என்ன?.

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.