........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:22

பாட்டியைப் போலில்லை...

அம்மா...
உனக்கு பசி இல்லாத போது
பாட்டி நிலவைக் காட்டி
ஊட்டி விடுவாளாம்...

உனக்கு பொழுது போகாத போது
பாட்டி பழங்கதைகள் சொல்லி
மகிழ வைப்பாளாம்...

உனக்குத் தூக்கம் வராத போது
பாட்டி தாலாட்டுப் பாடி
தூங்க வைப்பாளாம்...

அம்மா..
எனக்கும் பசியில்லை...
எனக்கும் பொழுது போகவில்லை...
எனக்கும் தூக்கம் வரவில்லை...

ஆனால் நீ மட்டும்...
பாட்டியைப் போலில்லாமல்...
தொலைக்காட்சிப் பெட்டியில்
அப்படி என்னதான்
பார்த்துக் கொண்டிருக்கிறாயோ...?

-தாமரைச்செல்வி.

 

 

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.