........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:24

எனக்குப் பிடிக்கும்!

தென்றல் எனக்குப் பிடிக்கும்! உலக
ஜீவனெல்லாம் பிடிக்கும்!
வெண்ணிலாவும் பிடிக்கும்!- அந்த
விண்மீன்களையும் பிடிக்கும்!

காலை மாலை வானம் கொடுக்கும்
காட்சி எனக்குப் பிடிக்கும்!
காலைத் தொட்டுப் போகும் கடலின்
அலைகள் எனக்குப் பிடிக்கும்!

காலைச் சூரிய வெளிச்சப் போர்வையைப்
போர்த்த எனக்குப் பிடிக்கும்!
காலை நேரம் புல்லின் நுனியில்
இருக்கும் துளிகள் பிடிக்கும்!

ஆல மரமும் அதன் பிள்ளைகளாம்
விழுதுகள் எனக்குப் பிடிக்கும்!
நீல வானில் மிதக்கும் அந்த
மேகப் படகு பிடிக்கும்

சாலையில் தீ வெயிலில் கிடைக்கும்
நிழலை எனக்குப் பிடிக்கும்!
பாலைக் கொடுக்கும் பசுவும் அந்த
ஆடும் எனக்குப் பிடிக்கும்!

உலகில் சிறந்த சிரிப்பும், வனப்பைக்
கொடுக்கும் மலர்கள் பிடிக்கும்!
வளையல் சத்தத் தோடு பெண்கள்
கொட்டும் கும்மி பிடிக்கும்!

இரவு நேரம் பறக்கும் மின்மினிப்
பூச்சி வெளிச்சம் பிடிக்கும்!
உறவை அழைத்து உண்ணும் காக்கை
அன்பு எனக்குப் பிடிக்கும்!

நாட்டை உயர்த்தும் படிப்பும், கடின
உழைப்பும் எனக்குப் பிடிக்கும்!
நல்ல தமிழில் பாட- அந்த
மகுடி இசையும் பிடிக்கும்!

எதற்கும் அசைந்து கொடாமல் இருக்கும்
மலைகள் எனக்குப் பிடிக்கும்!
எவரும் தொடாத வானவில்லெனும்
சேலை எனக்குப் பிடிக்கும்!

பூமியெங்கும் சுற்றும் பறவை
இனங்கள் எனக்குப் பிடிக்கும்!
பூவைப் போல சிரிக்கும் குழந்தை
தெய்வம் எனக்குப் பிடிக்கும்!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.        

 

 

 

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.