........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 249

இன்றைய பாரதம்?

இராமனுடைய
சிந்தனை எல்லாம்
சீதையை மீட்பது பற்றியாதாக இல்லை
இலங்கையினை கவர்வதே
அவனது இப்போதைய
நோக்கம்....

திரௌபதையின் சபதம் முடிக்க
தருமன்
கூட்டுச் சேர்ந்திருக்கிறான்
துச்சாதனர் கூட்டத்தோடு ...?

ஆட்சிக்காக
இலட்சுமணனை ஏலம் விடுகிறான்
இராமன்
எடுத்தவன் இராவணன் என்பதால்
ஓலம் இடுகிறான்....!

தூதுபோக மறுத்ததால்
அனுமனையே எரித்துவிட்டான்
இந்த இராமன்....

அரசியலுக்கு முன்னால்
அனுமான் என்ன
அண்ணன் தம்பி என்ன ....?

- மட்டுவில் ஞானக்குமாரன், கொழும்பு.

 

 

 

 

 

m

 

மட்டுவில் ஞானக்குமாரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.