........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 308

அழகும் அறுபதும்

 

பளிங்கு பூசிய பருவமேனியில்
பதினெட்டு வயது பளபளப்பு
நெளிந்து சுழுந்து நடக்கையில்
காணும் கண்கள்
சோம்பல் முறிக்கும்
நெகிழும் நெஞ்சம்
நெட்டு முறிக்கும்.

உலகழகுப் போட்டியில்
உச்சம் புள்ளி பெற்றவள் இவள்.
நீச்சலுடையில் நீந்தாது வந்தபோது
நீந்திய கண்களில் மீன்பிடியாது விட்டவர் எவர்.
கண்ணறை உடையில் காட்டி வந்த போது
கண்கெட்டுப் போயினர் பலர்.

உலகமே இருந்து வியக்க
இந்திரன் மனைவி இதயம் வெடிக்க
பிரம்மனின் நெஞ்சு புடைக்க,
காலத்தின் கண்கள் கடைக்கண்ணால்
பூவுலகில் ஒரு பொன்னொளி இவளாமே.

அறுபது வருடம் ஆறெனக் கடக்க
பளிங்கு முகமே பாகென உருகி
மெல்லிடையாளவள்
பொலுடையாளென
பல்லிடை சொற்கள்
வல்லினம் மெல்லும்.

காலக்கரங்களில் விதியின் வரைபடம்
உலக எல்லையென அவள் முகத்தில் விரியும்.

-திலீபன்.
 

 

 

 

 

 

m

 

திலீபன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.