........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 313

குறுங்கவிதைகள்!

 

சூவிங்கம்

மாடுகளைப் போன்றே
அசை போடுகின்றார்
மனிதரும்

மனித உடல்

பார்வைக்கு திடகாத்திரம்தான்!
உள்ளுக்குள்
எத்தனை நோய்களோ?

புதுமணத் தம்பதியர்

இன்பமான வாழ்க்கை
உறக்கம் தொலைத்தன
கட்டில்கள்.

தீக்குச்சிகள்.

உறங்கித்தான் கிடந்தன
உரசியதால்தான்
நெருப்பு!

ராகிங்

கொடிய நஞ்சு
தெரிந்தும் தொடர்ந்தால்
அழிவே..!

விண்மீன்கள்

மின்வெட்டு பொருட்டல்ல
கடமை தவறாமல்
ஒளிர்கிறது.

இருசக்கரதானிகள்

உதைத்தால் மட்டுமே
விழிக்கின்றன
இவைகள்!

இராஜபக்சே

நிகழ்காலத்திலும் ஓர் அசுரன்
நிரூபித்துக் கொண்டிருக்கிறது
இலங்கை!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

 

 

 

 

 

 

m

 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.