........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 414

வாழ்க தமிழினம்!!

‌தமிழ்த்திரு நாட்டின் தலைவர்கள் நாமே
தகர்ப்போம் சமுதாயக் கொடுமை
தன்னிகரில்லா தாய்மொழிக் காப்போம்
தருவோம் தாய்க்குப் பெருமை.

சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த
சான்றோர்கள் வாழ்ந்த நாடு
சத்திரம் படைத்து தரணி புகழ்பாட
சாதித்தது பல நம் நாடு.

இயல் இசை நாடகம் எண்ணிலாக் கலைப் பல
இயற்றியது இங்கு நாமே
இன்மொழி வாழ ஏனையோர் வாழ்த்த
இணைந்தே வாழ்த்திடுவோமே.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காப்பதில் நமது உவகை
கனிமொழிப் பேசும் கயவர்கள் பலரை
கரை சேர்ப்பது நமது கொள்கை.

சத்தியம் தழைக்க தருமங்கள் செழிக்க
சபதம் பல நாம் ஏற்போம்
சாதிச் சண்டை சார்பிலா நம்பிக்கை
சந்திக்கவேப் படை எடுப்போம்.

நீதி நேர்மைகள் நிலைத்திட வாழ்வோம்
நெஞ்சுரம் கொண்டு காப்போம்
நெறியிலா காயம் நிலைத்திட பாரோம்
நேருக்கு நேர் நின்று சமர்ப்போம்.

விடுதலை உணர்வு விளையாட வேண்டும்
விவேகமும் அதில் கலந்திட வேண்டும்
வெற்றிப் படைத்தே நாம் வாழ வேண்டும்
வீணர்கள் கயமை விரைந்தோட வேண்டும்.

வாழ்க தமிழ்மொழி! வாழ்க வள்ளுவம்!
வளர்க தமிழ்த்திரு நாடு!
வாழ்க பேராயம்! வாழ்க பிரபாகரனியம்!
வாழ்க! வளர்க! நம் தமிழினம்!!

-பொன்பரப்பியான்.

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.