........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 461

மனித நேயம்

மனிதனே மனிதனைத் தேடும் காலத்தில்
மனிதநேயம் எங்குள்ளது?
மனிதனே! உன் வீட்டு செல்லநாய்
உரிமையுடன் இருக்கையில் அமர்கிறது
நீ வளர்க்கும் பூனை படுக்கையில்
படுத்து புரள்கிறது!
மனிதனை மட்டும் தூரம் நிறுத்தும்
உனக்கு யார் மீது வெறுப்பு!
அவன் தேகம் மீதெனில்
உன் தேகத்தைப் பார்!
குணத்தின் மீதெனில் உன்
குணத்தை பார் - அவன்
நிறத்தின் மீதெனில் உன்
நிறத்தைப் பார்!
நாய்க்கொரு குணம்
பூனைக்கொரு குணம் - அவற்றிடம்
அன்பு காட்டும் நீ
மனிதனிடம் மறுப்பதேன்
மரம் போல் நினைப்பதேன்
பரஸ்பர அன்புகாட்டி
மனிதனை மனிதன் நேசி - அதுவே
மகத்தான பேருதவி
இதுவே! மனிதநேயம்
வளர்க்கும் உரம்!
அன்பு உலகை தாங்கும் - இனி
மனித நேயம் உலகில் ஓங்கும்!

-விஷ்ணுதாசன்.
 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.