........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 496

வாழ்வைத் தொலைக்கிறார்கள்!!

'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது-
எதற்கெதற்காகவோ
காத்திருக்கிற மனசு..

'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும்
மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்;
காத்திருக்கவே செய்கிறது..

'வருடத்தில் பூக்கும்
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்
வருடங்களிரண்டில்
பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்
தூரத்தின் இடைவெளியில் -
சிக்கிக் கொண்ட
பாரங்களாகவே கனக்கின்றன..

'எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்
கண் அடைக்கும் மனற் காற்று
எல்லாம் கடந்தும் -
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி
தீர வதையன்றி வேறில்லை..

'சான்றிதழ் தூக்கிக் கொண்டு
ஏறி இறங்கிய படிகள்,
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென
வெடித்துச் சிரித்த சிரிப்பு,
விமானத்திலிருந்து இறங்கிய பின்
வாங்கிய முதல் சம்பளம்,
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட
கண்ணீர்தான்
கண்ணீர்தான் மிச்சமாகுமென
அன்று தெரியவில்லை -

முடிகொட்டி
வாழ்க்கை மொட்டையாகி
கிழவனென்று பட்டம் சுமந்து
ஊர்செல்கையில்
மிக நன்றாகவே தெரிகிறது;

'தெரிந்து மட்டுமென்ன செய்ய
அதோ எனை சுமந்து வந்த விமானம்
திரும்பி செல்கையில்
இங்கிருந்து நிறைய பேரை -
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது;
அதே வதை நோக்கி!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.