........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 498

லஞ்சம்... முடிவு...?

எவனெவனோ கேட்டானாம்
லஞ்சம்
கொடுத்தது நீயும் நானும் செய்த
வஞ்சம்,

ஊரெல்லாம் நடக்கிறது
கொள்ளை
வீட்டில் சேர்த்த சுயநலத்தின்
தொல்லை,

காலமெல்லாம் பரிதவிக்கிறான்
மனிதன்
மனிதம் மறக்கப் பட்ட
இரும்பன்,

உலகெல்லாம்
கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை
எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது
மனசு,

செய்யாத கொடுமைக்கு
இல்லை தண்டனை
செய்த தவறிலிருந்து
இல்லை தப்பித்தலும்,

உடம்பெல்லாம்
ஆசையும் சுயநலமும் பூசி
கடவுளை
குற்றம் சொல்லும் முன் யோசி,

ஊரெல்லாம் பெருக்காத குப்பை
உனக்குள்ளும் உண்டென்றால் கோபம் வரும்
உனக்கான வாழ்தலில் உன்னை
தேடாத உன்னாலா சாதனை வரும்?

கடவுள்
உண்டென்றும் பொய்யென்றும்
வேஷம்;

காசுக்கும்,
தனித்துக் காட்டும் பேருக்குமே
நிறையபேரின் கோசம்,

யாரொன்றும்
கேட்பாரில்லை நீதி
கேட்போரில் தான்
சரியில்லை பாதி,

கேடுகெட்டுப் போன
வாழ்க்கை,
வீடுவிட்டு போனாலும்
ஊதாரி என்பர்,

முடிவில்லா
பயணமாகவே வாழ்க்கை,
முடித்துவைக்க
மரணமொன்றே வேட்கை!

-வித்யாசாகர்.
 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.