........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 500

பூமியைக் காப்போம்!

பூமித் தாயிக்கே
தீ வைத்தாயா
உஷ்ணப் போர்வையை
போர்த்தி விட்டாயா
பூமாதேவி முகத்தில்
வாகனக் கரி பூசி விட்டாயா
புவனத்தின் ஆயுளை
கரிய மில வாயுவை
அதிக அளவில் காற்றில்
கலக்க வைத்து
பாதியாக குறைத்து விட்டாயா
உனது சுயநலத்திற்காக
எதிர்கால சந்ததியின்
வாழ்க்கையை பணயம்
வைத்துவிட்டாயா
சொகுசு வாழ்க்கைக்கு
முக்கியம் அளித்து
ஓசோன் படலத்தில்
ஓட்டையை உண்டாக்கி விட்டாயா
புவிக்கு வாடகை
தர வேண்டாம் என்பதால்
இளப்பமாக நினைத்து விட்டாயா
உன்னைக் கருவறையில் தாய்
பத்து மாதம் தான் சுமக்கிறாள்
பூமித்தாயோ இறக்கும் வரை
தனது இதயத்தில்
உன்னைச் சுமக்கிறாள்
அவளுக்கு நீ தரும் பரிசு
அவளை நிர்மூலமாக்குவதா
சற்றே சிந்தித்துப்பார்
உனது சந்ததியினருக்காகவாவது
புத்துயிர்ப்புடன் இருக்கட்டும்
இப்பூமி.

- ப.மதியழகன், மன்னார்குடி.
 

 

 

 

 

 

m

 

ப.மதியழகன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.