........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 514

பாரம் தூக்கிகள்.

பாவம்...
இவர்கள்
என்ன செய்வார்கள்...
எதிரிகள் யாரென்று
இனம் காணத்தெரியாதவர்கள் .. !

கண்களைக்குத்த
கயவர்கள் முயலும்போது
சித்திரத்தை மறைத்து வைக்க
மறைவிடம் தேடுகிறார்கள் !

பாவம்...
இவர்கள்
என்ன செய்வார்கள் ...
எதிரிகள் யாரென்று
இனம் காணத்தெரியாதவர்கள் .. !

வறுமையும் பசியும்
வருணம் பார்த்து
வருவதில்லை....

பஞ்சமும் புயலும்
பாகுபாடு பார்ப்பதில்லை ...
கூலி உயர்வுக்காக
குரல் கொடுக்கும்போது
தாக்கும் தடிகள்
தங்களுக்குள்
பேதம் பார்ப்பதில்லை ...!

கீழ வெண்மணிகள்
இன்னும்
தொடர்கதையாகின்றன !

பாவம்...
இவர்கள்
என்ன செய்வார்கள் ...
எதிரிகள் யாரென்று
இனம் காணத்தெரியாதவர்கள் .. !

பல்லக்கு வாசிகள்
பாரம் தூக்கிகளை
பலிகடாவாக்குகிறார்கள்...!
ஆனால்.... ஆனால்...

பாரம் தூக்கிகளின்
பாதம் நோகும் ஒருநாள் !
அன்று...அன்று...!
பூமிப்பந்தின் சுழற்சியில்
புதிய வேகம் பிறக்கும்..!

-மு. ராஜாராம். 
 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.