........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 528

கடிகாரம்!

மின்சாரம் தன் சாரமாக்கும் கடிகாரம்.
கண் ஓயாது தரிசிக்கும் மையப்புள்ளி.
எண் ஆரம் கொண்டு எத்தனை அலங்காரம்!
வண்ண ஆரம் கரத்தினிலும் பல்லுருவம்!

எதிர்வாதமற்றவன், ஏவற்காரன் கண்காணிப்பாளன்.
அதிகாரம் முழுமை பெற்ற சட்டக்காரன்.
அதிகாரன் உலகை ஆட்டுவிக்கும் வணங்காமுடி.
சதிகாரன், சர்ச்சைக்காரன் இவன் சோம்பேறிக்கு.

'கடமையைச் செய் பலனை எதிர் பாராதே' என
திடமாய் திருப்பள்ளியெழுச்சி பாடும் திறலோன்.
திடசித்தன், மணிக்காதலிக்கு மணிக்கொரு தடவை
நடனமாடி முத்தமிடும் நிமிடக் காதலன்.

ஊருறங்கும் போதினிலும் யாருமற்ற வேளையிலும்
பாருறங்காது பாதுகாக்கும் பாகுபாடற்ற பாகன்.
'திருவினையாக்கும் முயற்சி ' யென்ற முதுசொல்லிற்கு
பெருமையான உதாரணம், இவனைப் பேசாதார் யார்?.

முடிப்பான், விடயங்களைத் தொடங்குவான் தொடர்வான்.
நொடிக் கொரு பேச்சு மாறாதவன்.
முடிப்பான் பேச்சு என்றாலவன் இறப்பான்.
கடிகாரத்தை மதிப்பவன் கௌரவம் பெறுகிறான்!

-வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.