........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 540

கலிகாலமடா சாமி...

ஆற்றுமணல்
வீடு கட்ட மட்டுமாச்சி,

ஆறு ஏரி குளமெல்லாம்
பாடத்தில் படிக்க மட்டுமாகுது,

சோறு குழம்பு பதார்த்தம் கூட
பேசனாயி போச்சி,

பேசினாலும் நடந்தாலும்
ஸ்டெயிலென்கிறான் மனிதன்,

செத்தாலும் மாலை போட்டு
வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்;

சோறு கொஞ்சம் குறைந்தாலும்
பொண்டாட்டிய அடிக்கிறான்
போதை தெளிந்து விடியும் போது
பேன்ட் சட்டையில் திரியுறான் -
பெர்பெக்டுனு பீத்துறான்,

அவளும் மட்டும் லேசுல்ல
ஆள விட்டு வைக்கல -
பணத்தை கரைச்சி குடிக்காம
பாவி மனசு ஓயல,

பொய்யி சொல்லி அலையிறா
குடும்பமுன்னு மறைக்கிறா
கெட்டதெல்லாம் வளர்த்துவிட்டு
கோல் சொல்ல போகுறா,

ஜீன்ஸ் பேன்ட் ஒசத்தியாம்
பிசா மட்டும் இனிக்குதாம்
தலையில் வைத்த ஒற்றை ரோஜா
நாட்டுப்புற மேக்கப்பாம்,

ஜட்டியோட அலையுது
டூப் பீசுல சிரிக்குது
பட்டுப் புடவை காசுபோட்டு நைட்கிளப்ல ஆடுது
சினிமாவுல வரதெல்லாம் தெருவிலேயே நடக்குது
பாரின் போல மாத்திட்டதா கனவுலேயே வாழுது,

ஆண்டி கதை படிக்கிறான்
ஆன்லைன்ல தேடுறான்
பிகரு வெட்ட அலையிறான்
பொண்டாட்டி தெருவில் போனா பார்க்கிறவன வெட்டுறான்,

சோம்பேறி இளைஞன்டா
சொகுசா பிழைக்கும் பொழப்புடா
போராடி ஜெயிக்காத பயத்தில் வளரும் ஜென்மம்டா
ஏமாந்தவன் தலை கிடைத்தா -
அறுத்துப் போடும் அசிங்கம்டா,

ஒன்னுஒன்னா மாறுறான்
எல்லாமே ரசிக்கிறான்
சுயநல மோகத்துல உறவை தள்ளி வைக்கிறான்
அக்கப் பக்கம் தொடர்பு அறுந்து ஒத்த ஆளா வாழுறான்,

பத்துமாசம் பிள்ளைய முந்தி செத்தா தின்னுறான்
பொணத்து மேல ஏறியமர்ந்து சாமி வணக்கம் சொல்லுறான்
பூச்சி தின்னு இறால் தின்னு, மீனு போயி ஆடு போயி,
மாடு தாண்டி பாம்பு பல்லி தாண்டி மனுசனையும் மேயுறான்,

கூறு கேட்ட வளர்ச்சிடா
காலம் மாறிப் போச்சுடா
கண்டதெல்லாம் செய்துவிட்டு
கரீ- க்கீட்டுனு பேசுடா;

நெருப்பை கொளுத்தி தலைக்கு மேல
போட்டுகுட்டே ஓடுடா..!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.