........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 603

சாலையோர பூக்கள் !

இதயத்தை கேட்டவளுக்கு
உயிரையே தர
தயாராயிருந்தேன்..
நிஜமாய்!

நம்பிக்கை இல்லை என்றால்
விண்கற்களிடம்
விசாரித்துப் பாருங்கள்..
விண்மீனாய் மாறி
என் காதல் சொல்லும்!

வியர்வை துளிகளை
நுகர்ந்து பாருங்கள்..
என் காதலுக்கு சாட்சியாய்
வாசம் வீசும்!

செவ்வாய்க்கு சென்று
ஆராய்ச்சி செய்யுங்கள்..
அவளின் செவ்வாயில்
நான் சுருண்டதை
வெட்கத்துடன் பகரும்!

சேற்றில் பூத்த
செந்தாமரை பெற்றுள்ள மதிப்பு..
சாலையோர பூக்களுக்கு
இல்லை தான்!

வெட்டாந் தரையில்
வெறுமையாய் இருந்த போதும்
இப்படி மூளைக்குள்
வெம்மை பரவியதில்லை!

ஆனால்..
அநாதை என்று தெரிந்த பின்
எனை துரோகித்து
வஞ்சித்தாயே!

நெருப்புக் கட்டைக்குள்
ஓடி புகுந்து..
தற்கொலை முயற்சியில்
என் இளமை!!!

- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, இலங்கை.     

 

 

 

 

 

 

 

m

 

தியத்தலாவா எச்.எப்.ரிஸ்னா அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு