|
கவிதை: 631
புனிதக் காதல்!

மெரினா கடற்கரை மணல்வெளியில் - கால்
மிதிக்கும் இடமெல்லாம் ஆணுறைகள்
தமிழன் காதலின் தனித்துவத்தை
தரணிக்கு உணர்த்தும் ஆவணங்கள்
பட்டப்பகலில் பாத்ரூம் போக
தட்டுக்கூடை மறைப்பெனவே
எரிக்கும் வெயிலில் கொதிக்கும் மணலில்-ஓர்
குடையின் நடுவே
குடும்பப்படம்...
கண்ணகிசிலையின் பின்புறத்தில்
கற்புக்கரசிகள் அணிவகுப்பு
கலங்கரைவிளக்கம் வரைநீளும்
கலங்கக் காதலர் கடைவிரிப்பு...
பெசன்ட்நகர் பீச்சின் புதர்கள் எல்லாம்
புனிதர்கள் புணரும் புகலிடங்கள்
வங்கக்கடலின் ஆசியுடன்-பெண்
அங்கக்கடலில் சங்கமங்கள்...
புலியைமுறத்தால் அடித்தவளின்-பேத்தி
முகத்தை மறைக்குது துப்பட்டா
புதுமைப்பெண்ணுக்கு முதல்தகுதி-பல
பாய் பிரெண்ட் இருப்பது மட்டும்தான்...
மாமல்லபுரத்திற்கு
மாண்கொண்ட புகழெல்லாம்
சரித்திரவேந்தர்
சிற்பங்களால் அன்று...
சதைப்பசிஎடுத்த
அற்பங்களால் இன்று...
கிண்டியில் சிறுவர் பூங்காவா?-நாங்கள்
மனிதர்களாயில்லை மாங்கவா?
பத்துபேர்கள் மத்தியிலும்
அத்துமீறும் ஆனும்பெண்ணும்
அருவருக்கதக்கவர்கள்
என்பதிலே ஐயமுண்டா?-நான்
சொல்வதிலே பொய்யுமுண்டா?
ஆணும்பெண்ணும் சந்தித்தால்
எந்த இடமும் பள்ளியறை-இந்த
மானம்கெட்ட விலங்குகளை
சிறையில் தள்ளனும் காவல்துறை...
தனிமனித ஒழுக்கமற்ற
சமுதாயம் குப்பை-இந்த
தறுதலைகள் திருமணத்தில்
மறைக்குது தான் தப்பை-யாரோ
தொட்டவளைக் கட்டியவன்
அன்றுமுதல் தியாகி-இந்த
கெட்டவர்கள் தான் நமது
ஒட்டுமொத்த வியாதி...
கவிதையில் சொன்னது
மிகச்சில இடம்தான்
தமிழகம் முழுவதும்-இந்த
கயவர்கள் மடம்தான்...
கண்ணில் தொடங்கும்
காதல்கள் எல்லாம்
கல்யாணத்தில் முடியுமெனில்
உண்மைக்காதல் வெற்றிபெற
உயிரைக்கொடுப்பதும் ஒருசுகமே... -இன்றோ
கண்ணில் தொடங்கும்
காதல்கள் எல்லாம்
கட்டிலோடு முடிகிறது...-தாய்
மண்ணைப்போல
கற்பைக் காத்த
தலைமுறை மெல்ல மடிகிறது...!
-ஆனந்தன்.
|