........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 731

முடிவை நோக்கி...!

முடிவை நோக்கி…
வாழ்க்கை செல்கிறது!

வாழ்வை விரும்பினாலென்ன…
விரும்பாமல் சலித்தாலென்ன
முடிவை நோக்கி
ஆயுள் செல்கிறது….

ஆசைகளை அடைந்த போதும்
நிராசைப்பட்டு சடைந்த போதும்
எமது முடிவுப் புள்ளி
பிறந்ததில் இருந்து
எமை நோக்கி
வந்து கொண்டேயிருக்கிறது…..

இலட்சியம் -
வெளுத்துப் பிரகாசிக்கலாம்…
கசந்து காய்ந்து போகலாம்…
“வெற்றி” சுவை கூறலாம்..
மறுத்து தொலைவாகலாம்.
பூமி புதிர் போடலாம்...
காற்று கவி பாடலாம்...
சோகம் வதை பண்ணலாம்...
இன்பம் கதை சொல்லலாம்...

நாம் கடி மலரில் துயிலலாம்...
காற்றில் பறக்கலாம்...
கீதம் பாடலாம்...
ஓளிக்கீற்றில் நடக்கலாம்...

எத்திசையில் போனாலும்
“முடிவை” நோக்கியே செல்கிறோம்
அதை முகர்ந்து பார்க்கத்தான்
இன்னமும்
இதயங்கள் துடிக்கின்றன..!

-ஜே. ஜுமானா, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

ஜே. ஜூமானா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு