........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 733

பழமொழிக்கவிதை!

மருமகள் உடைத்தால் பொன் குடமே - அதுவே
மாமியார் உடைத்தால் மண் குடமே
இருவருக்கிடையே வேற்றுமையே - என்றும்
ஏற்பட வந்ததாம் பழமொழியே
ஒருவர் விட்டுக் கொடுத்தாலே - வீட்டில்
நிலவும் அமைதி அதனாலே
வருவோர் கண்டால் பாராட்டும் - அங்கே
வாரா எண்ணுவீர் போராட்டம்

ஒத்துப் போவது உயரவென்றே - இருவர்
உணர்ந்தால் போதும் அது நன்றே
சத்தாய் வளர்த்திடும் உள்ளத்தை - மேலும்
சாந்தமே திகழ்ந்திட இல்லத்தை
வித்தே ஆகும் ஒற்றுமையே - எனில்
வேண்டாமங்கே மற்றவையே
சித்தம் வைப்பீர் பெண்னினமே - என
செப்பிட செப்பிய தென்மனமே!

-புலவர் சா. ராமாநுசம்.

 

 

 

 

 

 

 

m

 

புலவர் சா. இராமாநுசம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு