........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 743

ரமழான் வந்தது!

நிழல் நிஜங்களைக் காட்டிடும்
ரமழான்
இனி தினம் நன்மைகள் ஈட்டிட
ரமழான்
பசி வாட்டிடும் போதும்
உளம்
அமல்களை நிலைநாட்டிடுமே

நடு நிசியினில் தொழுகை
நாளும் இறையருளினில்; தஸ்லீம்.
பாவம் கரைத்திடும் தவ்பா
பாரில் முழங்கிடும் தஸ்பீஹ்
பூமி சுழன்றதின் பயனாய்
ரமழான் மாதத்தை அடைந்தோம்

உனது அருளால் யா அல்லாஹ்!

கண்கள் வடித்திடும் நீரில்
கல்பு குளித்திடும் தோய்ந்து
என்றும் துடித்திடும் இதயம் -
என்றோ நிற்பதை அஞ்சும்
வென்று குவித்தது எல்லாம்,
வேண்டும் ஏழைக்குச் செல்லும்!

குர் ஆன் ஓதிடும் கண்கள்
வெண்மை ஆகிடும் உள்ளம்
திண்மை ஆகிடும் ஈமான்..
சொல் செயல் எண்ணமெல்லாம்
நன்மையாக மாறிடுமே

உனது அருளால் யா அல்லாஹ்..!

நிழல் நிஜங்களைக் காட்டிடும் ரமழான்
அனு தினம் நன்மைகள் ஈட்டிட நாம்;,
உனை தினம் போற்றிடுவோமே!!

-ஜே. ஜுமானா, புத்தளம், இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

ஜே. ஜூமானா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு