........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
குறுந்தகவல்-110 தமிழகப் பண்டைய அளவை முறைகள்
பண்டைய தமிழகத்தில் ஏழு வகையான அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை பற்றி பண்டை நிகண்டுகளும் இலக்கிய நூல்களும் பேசுகின்றன. அவை; 1. எண்ணல் ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும். 2. நிறுத்தல் குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் என படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். நிறுத்தல் அளவு நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
பொன் முதலியவை நிறுக்கும் அளவு
4 நெல்லெடை = 1 குன்றிமணி பல்வகைப் பண்டங்கள் நிறுக்கும் அளவு
32 குன்றிமணி = 1 வராகனெடை 3. முகத்தல் பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும்.
முகத்தல் அளவு (சில இடங்களில் உரியையும், வேறு சில இடங்களில் படியையும் நாழி என்கிறார்கள்) 4. பெய்தல் நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
பெய்தல் அளவு 5. நீட்டல் விரல், சான், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.
நீட்டல் அளவு 6. தெறித்தல் நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும். தெறிப்பு அளவு
2 கண்ணிமை = 1 நொடி சிறுபொழுது
காலை - 6 முதல் 10 மணி வரை பெரும்பொழுது
கார் - ஆவணி, புரட்டாசி 7. சார்த்தல் சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும். நன்றி: முனைவர் தமிழப்பன் எழுதிய “தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” எனும் நூலில் அட்டவணைப் பக்கம் 18 முதல் 21 வரையுள்ள சா.கணேசன் எழுதிய “தமிழகத்து அளவை முறை” தொகுப்பு: கணேஷ் அரவிந்த்
|