........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-12

உண்மையான கவலை எத்தனை சதவிகிதம்?

 எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி செய்வதன் மூலம் வெற்றி தோல்வி கிடைப்பதைவிட ஒரு அனுபவம் உனக்கு கிடைக்கிறது. கவலை என்பது மனிதனை கொல்லும் வியாதி உளவியல் நிபுணர்கள் சொல்வது: 40சதவிகித கவலை உண்மையானதே கிடையாதாம், 30 சதவிகித கவலைகள் ஏற்கனவே நடந்த ஒன்றை பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதால் வருவதாம், 12 சதவிகித கவலை நமது உடல்நிலை பற்றி வருவதாம், 10 சதவிகித கவலை எதற்கு என்று தெரியமலே வருவதாம், இவரது கணக்கு சரி என்றால் 8 சதவிகித கவலைதான் உண்மையான கவலையாம். முடியாது என்று நினைக்கும் விசயத்திற்காக வருத்தப் படுவதைவிட முடியக் கூடிய விசயத்திற்காக உனது சக்தியை வெளிப்படுத்தினால் வெற்றி வரும்.

கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது என்று ஒரு ஞானி சொன்னது. ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலி என்றாவது நம்மை கொண்டு சேர்த்திருக்கிறதா என்றால் இல்லை அது போன்றுதான் நமது கவலையும். நம்மைச் சுற்றிலும் நடக்கக் கூடிய சின்ன சின்ன விசயங்கள் நம்மை மாற்றி அமைக்கும். எந்த ஒரு நதியும் படகினைக் கவிழ்ப்பதில்லை அப்படகு வலுவில்லாது இருக்கும் வரை.

காலையில் எழும்போது அலாரத்தைக் கண்டு அலராமல் நமக்கு இன்று கிடைத்த வாய்ப்பு மணியோசை என்று எண்ணி ( எதிர்மறை சிந்தனையாளர்கள் தான் அலாரம் என்று சிந்தித்து அலறுவர்களாம்) நமக்கு நாமே பேசி இன்று நமக்கு மகிழச்சியான நாள் என்று சொல்லும் போது அரைத் தூக்கத்தில் உதிர்க்கப்படும் இந்த வார்த்தை முட்டாள்தனமாகத் தோன்றினாலும் நம்முடைய ஆர்வத்தின் அடிநாதமாக பயணிக்கக் கூடிய சக்தி படைத்ததாம்.

(சிங்கப்பூரில் ஹென்டர்சன் சமுக மன்றத்தின் 19 வது பட்டிமன்றத்தில் கண்டனூர் சசிகுமார்)

பேசக் கேட்டவர்: பாண்டித்துரை

 

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.