........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-35

ஏழு குழந்தைகள் பெற்ற எகிப்து பெண்மணி

எகிப்து நாட்டு ஏழை விவசாயிக்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஏழை விவசாயிக்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் நான்கு ஆண்கள், மூன்று பெண் குழந்தைகளாவர். இச்சம்பவம் எகிப்து நாட்டின் கடற்கரை நகரான அலெக்ஸாண்டிரியாவில் 16-08-2008ல் நிகழ்ந்துள்ளது. ஏழு குழந்தைகளைப் பெற்ற கஸாலா காமிஸ் எனும் 27 வயது தாய் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைகள் அனைத்தும் இன்குபேட்டரில் துணையுடன் நலமாக இருக்கிறார்கள். தனது 33 வருட அனுபவத்தில் இதுபோன்றதொரு பிரசவ நிகழ்வைக் கண்டதில்லை என அந்த மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார். கஸாலா காமிஸின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு எட்டு மாதத்தில் குழந்தைகளை வெளிக்கொணர நேரிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். கஸாலாவின் கிராமத்தில் உள்ள மருத்துவரின் தவறான வழிகாட்டுதல் காரணமாகவே இது போன்ற நிகழ்வு ஏற்படக் காரணமானதாக அம்மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகின்றனர். கிராமப்புறங்களில் இது அதிகமாகக் காணப்படுகிறது. கருக்கலைப்பு செய்வது இஸ்லாத்தில் விலக்கப்பட்ட (ஹராம்) காரணத்தினால் அவர் கருக்கலைப்பு செய்யவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இக்குடும்பத்தினர் நிலைமையினைக் கருத்தில் கொண்டு இரண்டு வருடங்களுக்கு இக்குழந்தைகளுக்கு பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என எகிப்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதே வேளையில் எகிப்து நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு அரசு கவலையும் தெரிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் சுகாதார அமைச்சகத்தால் அந்நாட்டு மக்களிடையே வேகப்படுத்தப்பட்டுள்ளது.

-முதுவை ஹிதாயத்.

முதுவை ஹிதாயத் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.