........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-50 திரைப்படத்தில் முதன் முதலாய் முதல் கவர்ச்சி நடிகை முதன் முதலாய் அந்நாளிலேயே திரையில் திறந்த தோள்பட்டையைக் காட்டி, முன்புறம் மார்பின் பள்ளம் தெரியும்படி சட்டையைக் குறைத்துக் கொண்டு பின்புறம் முதுகு தெரியும்படி கவர்ச்சி காட்டி "பிளாட்டினம் பிளாண்ட்" எனும்
பெயரை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஜீன்ஹார்லோ தான். 1896 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ம்
தேதி நியூயார்க்கிலுள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மியூசிக் ஹாலில் "வாட்வில்லி குழுவினரால் இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி. 1903 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட "ஒரு அமெரிக்கத் தீயணைப்புப் படைவீரனின் வாழ்க்கைப் படம்தான் முதல் மௌனப்படம். உலகின் முதல் பேசும்படம் 1927 ஆகஸ்ட்டில் வந்தது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த "ஜாஸ் பாடகன்" நடிகர் ஆல் ஜால்சன் நடித்தார், பாடினார். பேசும் படத்தில் முதலில் பேசப்பட்ட வசனம் "நீங்கள் இதுவரை ஒன்றும் கேட்கவில்லை" என்பதே. இந்தியாவில் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் ஹரிச்சந்திரா(ஆண்டு:1915). முதன்முதலில் தயாரித்த பேசும் திரைப்படம் "ஆலம் ஆரா"(ஆண்டு: 1918). தங்கப்பதக்கம் (ஜனாதிபதி விருது) பெற்ற முதல் திரைப்படம் செம்மீன் (ஆண்டு:1965) மிகச்சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அகாடமி அவார்டை முதன் முதலாய்ப் பெற்றது. 1927-ல் வெளியான ஒரு ஊமைப்படம்தான்(இந்த அகாடமி அவார்டுதான் தற்போதைய ஆஸ்கார் விருதாக மாறியது). இந்தப்படத்தை இப்போது பார்த்தாலும் கூட திரில் ஏற்படுமாம். இந்தப்படத்தின் பெயர் இறக்கைகள்(Wings) -கணேஷ் அரவிந்த்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.