........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-58

எம்.ஜி.ஆர் வாங்கிய சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

திரைப்பட நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன். இவர் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்

1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
4. பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
பட்டங்கள்

திரைச்சேவை

1. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
2. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி. சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
3. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
4. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
5. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
6. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
7. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
8. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
9. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
10. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
11. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

பொதுச்சேவை

1. கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்
8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்

-மல்லிகா பிரபாகரன்.

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.