........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-60

ஒரு வரித் தகவல்.

  • காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

  • Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.

  • சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

  • அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

  • இந்துக்களின் பகவத்கீதை அதாவது பகவானின் கீதம் அல்லது "இறைவனின் பாடல்கள்" என பொருள்படும்.

  • இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அசலாம் அழைக்கும் என்பதற்கு "சமாதானம் உங்களோடிருக்கட்டும்" என்று பொருள்.

  • கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் என்பதற்கு "அப்படியே ஆகட்டும்" என பொருள்.

  • ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous

  • "The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

  • abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.

  • ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

  • a,b,c,d  என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.