........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-62 மும்பையில் இடம் பெற்றுள்ள கோயில்கள்
அரபிக் பெருங்கடலின் மேற்கு திசையில் இடம் பெற்றுள்ள மும்பை மாநகரம். மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம். இந்த மும்பையில் மும்பாதேவி மந்திர், புலேஷ்வர் மந்திர், பாணகங்கா குளம், வல்கேஷ்வர் கோயில், பபுல்நாத் மந்திர், மகாலட்சுமி கோயில், மகரேஸ்வர் மகாதேவ் மந்திர் சித்தி வினாயகர் கோயில் ஆகியவைகள் புகழ் பெற்ற கோயில்கள் என்று சொல்லலாம்.
இங்கு மும்பாதேவி வசிப்பதால் இந்த நகரம் மும்பை
என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என்கிறார்கள். மும்பா தேவி பூமாதேவி என்ற
பெயராலும் அழைக்கப்படுகிறாள். ஒரு காலத்தில் இந்நகரத்திலுள்ள மீனவர்கள்
மும்பராகா என்ற அரக்கனால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். அவனுடைய அராஜகத்தை
தாங்க முடியாத மீனவர்கள் சக்தி தேவியை மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள்.
மீனவர்களின் பிரார்த்தனையை மதித்து மும்பா தேவி அவதரித்தாள். மீனவர்களை காக்கும்
பொருட்டு மும்பாதேவி மும்பராகா என்ற அரக்கனை அழித்து அந்த இடத்தில் நிரந்தரமாக
வாசம் புரிந்தாள். மீனவர்கள் மும்பா தேவியின் மகிமையைப் போற்றி மும்பா தேவி
கோயில் ஒன்று கட்டினார்கள். ஒன்றாம் நூற்றாண்டில் மீனவர்களால் கட்டப்பட்ட இந்தப்
பழமையான கோயில் நாளடைவில் சேதமடைந்து மறுபடியும் 1878 ஆம் ஆண்ழல் ஆங்கிலேயர்கள்
இந்தக் கோயிலை புலேஷ்வர் என்ற இடத்தில் கட்டினார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி
பல நகைக் கடைகள் இருக்கின்றன. புகழ் பெற்ற ஜாவேரி பஜார் இந்தக் கோயிலருகே இடம்
பெற்றிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 1801ஆம் ஆண்டில் இந்தூரை ஆண்டு வந்த ராணி அகில்யாபாய் ஹோல்கர், சித்தி வினாயகர் கோயிலை கட்டினார். முன்பு இந்தக் கோயிலைச் சுற்றி பீமா நதி ஓடிக் கொண்டிருந்தது. சித்தி வினாயகர் கோயிலின் மேற்கூரைகள் தங்கத் தகடுகளால் அமைந்திருக்கிறது. அஷ்ட வினாயகர் வடிவங்களைக் கொண்ட மரக்கதவுகள் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். ஒரு கையில் தாமரைப் பூவும், இரண்டாவது கையில் கோடாரியும், மூன்றாவது கையில் கொழுக்கட்டையும், நான்காவது கையில் ஜபமாலையும் கொண்டு காட்சி தரும் வினாயகரின் அழகை வார்த்தைகளால் சொல்லி வருணிக்க முடியாது. காரியங்கள் வெற்றி பெறுவதற்கு சித்தி வினாயகரை வேண்டிக் கொண்டு சென்றால் அந்தக் காரியம் கைகூடுவது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். மும்பை சென்றால் இந்தக் கோயில்களைக் காணாமல் வந்து விடாதீர்கள்... -சந்தியா கிரிதர், புதுதில்லி.
சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள்
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.