குறுந்தகவல்-71
ஏன் என்று தெரியுமா?

கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?
கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன்
நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
வானம் நீலநிறமாய்த் தோன்றுவது ஏன்?
சூரிய ஒளியில் உள்ள ஊதா, நீல நிறக் கதிர்கள், நீண்ட செந்நிறக் கதிர்களைக்
காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு
ஆகிய ஒவ்வொன்றுடனும் பட்டுத் தெறித்து, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை
விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த்
தோன்றுகிறது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும்
தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள்
மின்னுகின்றன.
காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும்,
நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை
அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும்,
காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நகம் வெட்டினால் வலிக்காதது ஏன்?
நம் உடலின் ஒரு பகுதியான நகங்களுடன் இரத்த நாளங்களுக்கோ, குறுத்தெலும்புகளுக்கோ
எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் நரம்பின் தொடர்பு இல்லை. எனவே நகம் வெட்டும்
போது வலிப்பதில்லை.
நிலவின் ஒரு பக்கம் மட்டும் தெரிவது ஏன்?
நிலவு தன் அச்சில் ஒரு முறை தானே சுற்றுவதற்கு 27 1/2 நாட்கள் ஆகின்றன. பூமியைச்
சுற்றுவதற்கும் இந்த நாட்கள்தான் ஆகின்றன. அதனால்தான் நிலவின் ஒரே பக்கம்
நமக்குத் தெரிகிறது. மறுபக்கம் தெரிவதில்லை.
சங்கைக் காதில் வைத்தால் சத்தம் கேட்பது ஏன்?
சங்குகள் பல வளைவுகளுடன் கூடிய மேற்பரப்புடையவை. இதனால் காற்று உள்ளே
நுழையும்போது, பலவிதமான தடுப்புக்குள்ளாகிறது. இத்தடுப்பினால் ஒருவித அதிர்வலை
எழுகிறது. அது, கடல் இரைச்சலைப் போலக் கேட்கிறது.
இரத்தம் சிகப்பாய் இருப்பது ஏன்?
இரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தம் சிகப்பாக இருக்கிறது.
பொருள்கள் பூமியில் விழுவது ஏன்?
பூமியிடம் உள்ள புவியீர்ப்பு சக்தி இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் பூமியின்
மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு சக்தி வினாடிக்கு 32 அடியாக உள்ளது.
வான்வெளி வட்டமாய்த் தெரிவது ஏன்?
நம் கண் பார்வை ஒரு குறிப்பிட்ட தொலைவுதான் தெரியும். வட்டமாய் இருக்கும் நம்
கண்களால் எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டமாய்த்தான் தெரியும்.
-கணேஷ் அரவிந்த்.
கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள்


முந்தைய குறுந்தகவல் காண

|