........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-88

குழந்தை பெற்று சாதனை

ஒரு பிரசவம் இரண்டு நாட்கள்

கிரேக்க நாட்டிலுள்ள சலோனிக்கா நகரில் இப்ராஹிம்
- குலம் என்ற தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்த போது1998 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர்-31 என்றும் அடுத்த குழந்தை பிறந்த போது 1999 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதியென்றும் பதிவாகி உள்ளது.

இந்தத் தம்பதியர்களுக்கு இரட்டைக் குழந்தைகளில் ஒன்று 1998 ஆம் ஆண்டும், மற்றொன்று 1999 ஆம் ஆண்டும் என இருந்ததால் இது ஒரு சாதனையாகப் பதிவாகி விட்டது.

பிப்ரவரி -29 குழந்தை

நார்வேயிலுள்ள "ஹென்ரிக்சன்" என்பவரின் குடும்பத்தில் ஒரு அதிசய சாதனை நடந்தது. முதல் பெண் குழந்தை பிறந்தது பிப்ரவரி 29, 1960 ஆம் ஆண்டு. இரண்டாவது பையன் பிறந்தது பிப்ரவரி 29, 1964 ஆம் ஆண்டு. இரண்டாவது பையன் பிறந்தது பிப்ரவரி 29, 1968 ஆம் ஆண்டு.

இந்த அதிசய நிகழ்வும் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.

69 பிள்ளைகள் பெற்ற தம்பதியர்

ரஷ்யாவைச் சேர்ந்த "ஃபையோமோர்வாயிலேட் - மதாம் வாஸிலெட்" தம்பதியர்கள் 69 குழந்தைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.

இந்தத் தம்பதியர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகளும், 7 முறை மூன்று குழந்தைகளும், 4 முறை நான்கு குழந்தைகளுமாக மொத்தம் 69 குழந்தைகள் பிறந்தன.

1850 ஆம் ஆண்டில் ரஷ்ய சக்ரவர்த்தியாக இருந்த இரண்டாம் அலெக்ஸாண்டர் இந்தச் சிறப்புக்காக இத்தம்பதியர்களைப் பாராட்டிப் பல பரிசுகளை அளித்திருக்கிறார்.

இந்தத் தம்பதியர்களின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

-தேனி. எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.