........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-93

ஈபிள் கோபுரம் - சில முக்கியத் தகவல்கள்.

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்த் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள்.

  • கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

  •   கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

  • இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் ள்ளது.

  • இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

  • வர்ணம் தீட்டுவதற்கு 60 ன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

  • இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .

  • இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

  • இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

  • இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது.

  • பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.

  • இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

  • கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

  • அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

  • இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

  • இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.