........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன் மொழிகள்

மந்தப்புத்தியுடைய சோம்பேறி

  • ஒரு தவறு செய்யும் மனிதன் அதைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அதுவும் ஒரு தவறாகி விடும்.

- கன்பூஷியஸ்

  • எல்லா இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது. ஆகவே அவர் தாயைப் படைத்தார்.

 -யூதர்

  • கடனாளியாகக் காலையில் எழுவதை விட இரவு பட்டினியாய்ப் படுப்பது மேல்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்
 

  • உலக ஆசைகளால் உந்தப்பட்டு, ஒவ்வொரு ஆசையையும் அனுபவித்து பூர்த்தி செய்ய மனிதன் துடிப்பது, எரியும் நெருப்பை அணைக்க அதில் மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்குச் சமம்.

-ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

  • சமயம் என்பது மெய்யுணர்வை அறிதல். அது அழகுப் பேச்சோ, தத்துவமோ, சித்தாந்தமோ அல்ல.

-சுவாமி விவேகானந்தர்.
 

  • எவன் உரிய வேளையில் விழித்து எழாமலும், உடல் பலமிருந்தும் சோம்பலில் ஆழ்ந்த கருத்திலும், சிந்தனையிலும் உறுதியற்று இருக்கிறானோ, அந்த மந்தப்புத்தியுடைய சோம்பேறி ஞானமார்க்கத்தை அடைய முடியாது.

-புத்தர்.

  • இழிய புழுவையும் கொடிய குற்றவாளியையும் நேசிக்க உன்னால் முடியாவிட்டால், உன் உள்ளத்துல் இறைவனை ஏற்றுக் கொண்டுள்ளதாக எவ்வாறு நீ நம்ப முடியும்?

-ஸ்ரீ அரவிந்தர்.

  • சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் கிடைக்கும்.

-நபிகள் நாயகம்(ஸல்)
 

  • தீமையான காரியங்கள் நடக்கும் போது நல்ல காரியங்களும் நடக்கின்றன. அந்தக் கடினமான நேரங்களில், எத்தனை நண்பர்களும், குடும்பங்களும் நமக்கு உதவி செய்தனர். என்பதைக் கவனித்துப் பார். அது நமக்கு ஒரு நன்மையான காரியமாக இருக்கும்.

-இயேசு கிறிஸ்து.

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.