........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் விவேகானந்தரின் பொன்மொழிகள்!
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை
உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும்
இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ
உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி
தானாக உன்னை வந்து அடையும்.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான
வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில்
அழித்துவிடு.
மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால்
மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர,
கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே
உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.
உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது.
மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.
- தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.