........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் அப்துல்கலாம் சொல்லும் அறிவுரைகள்
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன
நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
இன்னல்களும் பிரச்சனைகளும் நாம்
வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே
உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த
சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு
பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல
திறமைகளும் வெளிப்படுகின்றன.
ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது,
தான் காண்பதைத் தவறாக எடை போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக
இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு
செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை
போட்டுப் பார்ப்பதில்லை.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்
எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு
சமாளியுங்கள்.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக
பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு போராடித் தீர்வு காண முடியும்.
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப்
பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
தனது இலக்கைக் குறிவைத்துத் தொடர்ந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே
சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல்
இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான
செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே
எடுத்துக் கொள்ள வேண்டும்.
தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட
விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.
தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை
வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!
நமது ஆரோக்கியத்திற்குக் கஷ்டங்கள் அவசியம் தேவை!
நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வுப் பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக்
கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல்
போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை
அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனைக்
கண்ணோட்டம், நம்பிக்கை.
எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால்
தற்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான்
நீங்கள் சுதந்திர மனிதர்!
கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும்
ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும்,
தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும்
தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.
- தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.