........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-38

வலைப் பூக்கள்-38

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

மூலிகைவளம் 

பல மூலிகைச் செடிகள் குறித்து அவற்றின் தாவரப் பெயர், தாவரக் குடும்பம், வழக்கத்திலிருக்கும் அதற்கான வேறு பெயர்கள், பயன் தரும் பாகங்கள், வளரக்கூடிய இயல்பு போன்றவைகளுடன் அதன் மருத்துவப் பயன்கள் அதன் புகைப்படம் என்று  அரிய தகவல்களை இங்கு வலைப்பதிவர் தொகுத்தளித்து வருவது நன்றாக இருக்கிறது. இது தவிர பல நோய்களுக்கு மூலிகை மருந்துகள் குறித்த தகவல்களும் பயனுள்ளதாக இருக்கிறது.

http://mooligaivazam-kuppusamy.blogspot.com

 

பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்....

இந்த வலைப்பூவில் சில முக்கியச் செய்திகள் குறித்த விமர்சனங்கள், சில சினிமா குறித்த கருத்துக்கள், சில அனுபவங்கள் என்று வலைப்பதிவர் நொந்து போய்(உண்மையாகவா?) எழுதியிருக்கிறார். 

http://jackiesekar.blogspot.com

முத்தமிழ் 

இந்த வலைப்பதிவில் முத்தமிழ் குழுமத்தின் செய்திகளுடன் பிற நல்ல தகவல்களும் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://muththamiz.blogspot.com

இணைய குசும்பன் 

இந்த வலைப்பூவில் சில கற்பனையான உரையாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வலைப்பதிவரின் குசும்புகளை (குறும்புகள்தான்) பாருங்களேன்.

http://kusumban.blogspot.com

 

  ஊர் உளவராம் 

வலைப்பதிவர் நிறைய விஷயங்களை இந்த வலைப்பதிவில் அலசிச் சொல்கிறார். நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

http://sinnakuddy.blogspot.com

      

தமிழ் கதை, சிறு கதைகள்

 வலைப்பதிவர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் எழுதிய சிறுகதைகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. சில கதைகள் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

http://banuvasan.blogspot.com

 

ரேகுப்தி...!!" 

 பத்தி, கவிதை, நாட்குறிப்பு என்கிற சில தலைப்புகளில் பல தகவல்களை வரிசைப்படுத்தியிருக்கும் இந்த வலைப்பூவில் சில தகவல்கள் அவசியமானதாகத் தோன்றுகிறது.

http://rekupthi.blogspot.com

 

    பதிவுகள் 

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் அனுபவங்கள், செய்தி விமர்சனங்கள், சொந்தக்கதை என்று பல பிரிவுகளில் பல புதிய தகவல்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://sathyapriyan.blogspot.com

 

மஞ்சூர் ராசாவின் பக்கங்கள் 

இந்த வலைப்பதிவில் பல விஷயங்களை வலைப்பதிவர் அலசி வெளியிட்டு வருகிறார்.

http://manjoorraja.blogspot.com

நேயமுகில் 

இந்த வலைப்பதிவில் அதிகமாக வலைப்பதிவரின் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. இடையிடையே வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது. கவிதைகள் நன்றாக இருக்கிறது.

http://neyamukil.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.