* கடவுள் அடிக்கடி நம்மிடம் வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை.
* நம்பிக்கையில்லாமல் பிரார்த்தனை செய்பவன் தன் முறையீடுகள் நிறைவேற்றப்படுமென்று நம்பமுடியாது.
* விதியை விலக்கலாம் என்று ஒரு வழியிலே சென்றால், அங்கேயும் அது முன்வந்து நிற்கும்.
* அதிருஷ்டம் நமக்குத் தூக்கத்தில் வரும்.
* கெட்டதை விட நல்லதிருஷ்டத்தைத் தாங்கப் பெருங்குணங்கள் தேவை.
* ஆட்டைத் தேடுபவன் ஓநாயைக் கண்டான்!
* உலகம் முன்னை விட அறிவு பெற்றிருக்கிறது.
* இயற்கைக்கு மாறுபட்டது அனைத்தும் அரைகுறையானவை.
* புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம்.
* வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது, கண்ணீர் வரும்.
* எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லையென்று சொல்லியதில்லை.
* காதல் வந்துவிட்டால், கழுதைகளும் நடனமாடும்.
* ஒநாயை அடக்கி வைக்க அதற்கு விவாகம் செய்து வை. (முரடனாயிருக்கும் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவன் அடங்கி விடுவான்)
* ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை.
* வீடில்லாத மனிதன், கூடில்லாத பறவை.
* நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; தீய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன்.
* அதிக உறவினர், அதிகத் துன்பம்.
* விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான்.
* குருடனும் சில சமயங்களில் தானி பத்தைக் கண்டுபிடிக்கிறான்.
* நோயைச் சொன்னல்தான், குணமாக மருந்து கிடைக்கும்.
* ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது.
* சேற்றிலிருப்பவன் கரையிலிருப்பவனையும் சேர்த்து இழுத்துக் கொள்வான்.
* பெரிய பணக்காரனும் முடிவில் ஒற்றைத் துணியோடுதான் போகிறான்.
* ஏழையின் பணம் சூரியனைக் கண்ட பனி போல் தீர்ந்து விடுகின்றது.
* தீய வழியில் வந்த செல்வம் செழிப்பதில்லை.
* வறுமை ஒரு வகையான தொழு நோய்.
* வாழ்க்கையில் வாழ்வதைக் காட்டிலும் செயல்தான் அவசியம்.
* தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளை சலவைத் கல்லில் எழுது.
* சொற்ப இன்பம், நீண்ட துயரம்.
* சிரிக்காத நாள் வீணய்ப் போன நாள்.
* பின்னால் இரண்டு கொடுப்பதாகச் சொல்வதை விட, ஒன்றைக் கொடுத்தனுப்புதல் மேல்.
* கொடுக்கக் கூடியவனுக்கு நண்பர்கள் அதிகம்.
* உபகாரம் செய்பவன் நன்றியற்றவர்களை உண்டாக்குகிறான்.
* நன்றி மறத்தலே மற்றத் தீமைகளுக்கெல்லாம் தாய்.
* பண்பில்லாத அழகு மணமில்லாத மலர்.
* அழகுள்ள பெண்ணையும், கிழிந்த சேலையையும் யாராவது பிடித்து இழுப்பர்.
* அதிகப் படிப்பும் மிகக் குறைந்த படிப்பும் மனவளர்ச்சிக்கு இடையூறுகள்.
* ஒன்றும் அறியாதவனுக்கு ஐயமே இல்லை.
* ஒரு மனிதனை அறிய, அவன் பதில்களை விட்டுவிட்டு, அவன் கேள்விகளைக் கவனிக்கவும்.
* சாதாரணப் புத்தியால் செய்ய முடியாததைச் செய்வதுதான் விவேகம்.
* எல்லோரும் மூடர்களானால், நீ மட்டும் அறிவாளியாயிராதே.
* இசை வயிற்றை நிரப்பாது.
* ஒடினால் மட்டும் போதாது; உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும்.
* பழமொழியால் திருடனும் அறிவாளியாவான்.
* வல்லமையுள்ளவர்களின் வாதங்களுக்கே எப்பொழுதும் மதிப்பு அதிகம்.
* பண்பு எப்பொழுதும் சிறுபான்மைக் கட்சியாகவே இருக்கும்.
* மனச்சாட்சி இல்லாதவன் ஒன்றுமில்லாதவன்.
* நாம் விரும்புவது கிடைக்காத போது, எது கிடைத்ததோ அதை விரும்ப வேண்டும்.
* வேண்டாம் என்று தியாகம் செய்து தள்ளுவதில், ஒவ்வொன்றிலும் ஏதோ நன்மையிருக்கிறது.
* நாட்டு நாகரீகத்தைப் பின்பற்று, அல்லது உலகத்தை விட்டுப் போய்விடு.
* விளக்கொளியில் உண்மையாகத் தோன்றியது, சூரிய வெளிச்சத்தில் மாறவும் கூடும்.
* வாக்களித்த பொருள்கள் செலுத்த வேண்டிய கடன்கள்.
* உன்னை ஆட்டுக்குட்டியாக ஆக்கிக்கொண்டால், ஓநாய் உன்னைத் தின்றுவிடும்.
* முடவர் முன்னால் நொண்டி நடக்காதே.
* பிச்சைக்காரன் பணக்காரனானால் அவன் பெருமிதத்திற்கு அளவேயிராது.
* செருக்கும் தற்பெருமையும் மனிதனின் ஆதிப் பாவம்.
* பண்டத்தையும் பழக்கத்தையும் உடைக்க வேண்டும்.
* உணர்ச்சிமயமாயிருப்பவர்களை எங்கு வேண்டுமானலும் தூக்கிச் செல்லலாம்.
* நாவால் அடிபடுவதை விட, காலால் உதைக்கப்படுவது மேல்.
* ஒவ்வொரு சொல்லாகச் சேர்ந்து நூல் உருவாகின்றது.
* இழைக்கப்பட்ட இன்னல்களை மணலில் எழுதவும், செய்த நன்மைகளைப் பளிங்கில் எழுதவும்.
* நல்ல சொற்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் மெளனமாக்குகின்றன.
* நடக்காது என்ற காரியம்தான் எப்பொழுதும் நடைபெறுகின்றது.
* தலைதான் எப்பொழுதும் இதயத்தால் ஏமாற்றப் பெறுகின்றது.
* நன்மையைப் போலவே, தீமையிலும் வீரர்கள் இருக்கிறார்கள்.
* பெரும்பாலும் பயத்தினால் தைரியம் பிறக்கும்.
* ஒடுகிறவனுக்குப் பின்னால் யாரோ துரத்தி வருவது போலவே இருக்கும்.
* நீதியில்லாமல் புகழ்ந்தால், கண்ணியமானவன் வருத்தமடைவான்.
* உழைப்பு மகிழ்ச்சிக்குத் தந்தையாகும்.
* உலகத்துச் செல்வங்களெல்லாம் இழந்து போன ஒரு கணத்தைத் திரும்பப் பெற முடியாது.
* எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. அவை; காலமும் மெளனமும்.
* மழைக்காலத்தில் எங்கும் மழை பெய்யும்; கோடையில் கடவுள் விரும்பிய இடங்களில் மட்டும் பெய்யும்.
* ஒடிக் களைப்பதை விட, அடைத்துக் கிடப்பதில் குதிரை அதிகக் களைப்படையும்.
* ஒடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம்.
* பயனுள்ள பொருள் சுமையாகத் தோன்றாது.
* ஒரு பெண் அந்தரங்கமாக வைத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அவளுடைய வயதுதான்.
* சிக்கனம் என்பது ஏழைகளுக்குச் சொத்து, செல்வர்களுக்கு நல்லறிவு.
* தேவையில்லாதவைகளை வாங்குவோன், விரைவில் அவசியமானவைகளையும் விற்க நேரும்.
* பசியுள்ள குதிரை அடிப் புல்லைக் காலியாக்கி விடும்.
* விலையைச் சொன்னால், உண்பதின் சுவை போய்விடும்.
* அமைதி செல்வத்தை உண்டாக்குகின்றது; செல்வம் போரை உண்டாக்குகின்றது.