* ஆமையைக் கடித்த ஈக்கு வாய்தான் வலிக்கும்.
* புதைத்து வைத்த பொருளுக்கும், மறைத்து வைத்த அறிவுக்கும் வேற்றுமையில்லை.
* கதிர் முற்றிவிட்டால், அறுவடையை நாளைக்கு என்று ஒத்தி வைக்கக் கூடாது.
* கொடுக்க முடியாத கடன்காரரிடம் கிடைத்தது ஆதாயம்.
* பரம ஏழைக்கு கடனே இராது.
* ஒருவனுடைய உணவு மற்றொருவனுக்கு விசமாகலாம்.
* போர் நடக்கும் பொழுது சட்டங்கள் ஊமைகளாகி விடுகின்றன.
* அமைதியான காலத்தில் சிங்கங்களாய் இருப்பவை, போரில் மான்களாக இருக்கும்.
* போரைப் போலவே அமைதியிலும் புகழ் பெற முடியும்.
* சமயம் இல்லாத மனிதன் கடிவாளம் இல்லாத குதிரை.
* மனிதனின் பிறப்பிடம் உலகம்.
* தத்துவம் வழி காட்டும், அடையவேண்டிய லட்சியம் ஞானம்.
* நமது நெஞ்சினுள்ளே ஒரு தெய்வத்தன்மை உள்ளது.
* மக்கள் எப்படியோ, அப்படியே குருக்களும் இருப்பர்.
* நல்ல அதிருஷ்டம் வரும் போது, நல்ல புத்தி இருப்பது அரிது.
* மூட நம்பிக்கை மனத்தை விஷமாக்கி, அதன் அமைதி அனைத்தையும் அழித்து விடுகின்றது.
* இயற்கையை மாற்றுவது கடினம்.
* மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை.
* மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான்.
* நாம் வாழத் தொடங்கிக் கொண்டே யிருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை.
* பெண் மனிதனின் குழப்பம்.
* கோபம் வந்த பெண் கரையில்லாத கடல்.
* செல்வமுள்ள பெண்ணைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை.
* மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான்.
* தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன்.
* அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.
* எதிர்ப்பு இல்லாவிட்டால், பண்பு வாடி உதிர்ந்து விடும்.
* மனிதனின் நடத்தையே அவனுடைய அதிருஷ்டத்தைத் தீர்மானிக்கிறது.
* மிகவும் மோசமான கேவலம் வறுமைதான்.
* பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது பெரிய உருவாகிவிடும்.
* ஒரு பொய்யை மிதித்துக் கொண்டு அடுத்த பொய் வரும்.
* உன்னிலும் மேலானவர்களுக்கு வழிவிடு.
* ஆணியை ஆணியால் அகற்றுவது போல், பழக்கத்தைப் பழக்கத்தால் நீக்க வேண்டும்.
* முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை தெரியாது.
* அமைதியான நாயிடத்தும், அசைவில்லாத நீரிடத்தும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
* புகழத் தெரியாதவனுக்குப் பேசவேத் தெரியாது.
* செய்ய வேண்டிய கடமையைச் செய்வதில் நமக்குப் பாராட்டுக் கிடையாது.
* பிறந்தால் அரசனாகப் பிறக்க வேண்டும் அல்லது மூடனாய்ப் பிறக்க வேண்டும்.
* கீழே நிலமுள்ளவனுக்கு அந்நிலத்திற்கு மேலே வானம் வரை சொந்தம்.
* அடிக்கடி சோதிக்கப் பெற்ற பொறுமை கோபமாக மாறும்.
* நீ நன்மைகளே செய்திருக்கையில், துன்பம், பதிலாக விளையுமானால், மிகவும் வேதனையாய்த்தானிருக்கும்.
* சோம்பலுள்ள மனத்திற்கு எது தேவை என்றே தெரியாது.
* எப்பொழுது தொடங்கலாம் என்று நாம் ஆலோசிக்கும் பொழுதே, காலம் கடந்து விடுகின்றது.
* மூர்க்கமான விலங்குகளும், அடைத்து வைத்தால், வீரத்தை மறந்து விடுகின்றன.
* வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கிக் கொள்பவன் இரண்டாம் முறையும் வென்றவனவான்.
* அபாயமில்லாமல் அபாயத்தைத் தாண்ட முடியாது.
* அச்சம் மனிதர்களை எதையும் நம்பும்படி செய்துவிடும்.
* புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய புகழும் போய் விடுகிறது.
* கழுதை போல் உழைத்தவன் கனவானைப் போல் உண்பான்; கனவானைப் போல் உழைத்தவன் கழுதை போல் உண்பான்.
* பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகானில்லை.
* வயலுக்கு ஒய்வு கொடுத்தால், அதிக விளைச்சல் காணும்.
* பிறருக்குச் சொல்லிக் கொடுக்காமல் கட்டி வைத்திருக்கும் அறிவு பயனற்றது.
* இரகசியத்தைக் காப்பதை விட வாயில் தீயை அடக்கிக் கொள்ளல் எளிது.
* ஒருவன் நஷ்டமில்லாமல் ஆதாயமடைய முடியாது.
* சிக்கனம் இருந்தால், மற்ற நல்ல பண்புகள் யாவும் வந்துவிடும்.
* மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது.
* தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை.
* அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள்.
* இன்று விருந்து, நாளை உபவாசம்.
* மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம்.
* மனம் வேறிடத்தில் இருந்தால், எல்லோருக்குமே கண்கள் குருடுதான்.
* இரவுச் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
* நோய், நாம் யார் என்பதைக் காட்டுகின்றது.
* நோய்களுக்கு அஞ்சி ஒடும் பொழுது, நீங்கள் மருத்துவர் கைகளில் சிக்குகிறீர்கள்.
* மரணம் மருத்துவருக்கு அஞ்சாது.
* மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும்.
* ஒவ்வொரு நன்மையிலும் ஒரு தீமையும் உண்டு.
* அதிருஷ்டமுள்ளவன் என்பதைக் காட்டிலும், நல்லவன் என்று பெயரெடு.
* ஒருவன் பணக்காரன் என்றால், அவன் நீதியற்றவனாயிருப்பான். அல்லது நீதியற்றவனின் வாரிசாக இருப்பான்.
* அனைவரும், அவன் பணக்காரனா? என்றேக் கேட்கிறோம். அவன் நல்லவனா? என்று ஒருவரும் கேட்பதில்லை.
* ஏழை மனிதன் தன் ஆடுகளை எண்ணிப் பார்ப்பது இயற்கை.
* மக்களின் செயல்கள் தெய்வங்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.
* இன்ப நிலைத்திருப்பதில்லை, சிறகு முளைத்துப் பறந்துவிடும்.
* அரிதாக வரும் இன்பத்திற்கு அருமை அதிகம்.
* கண்ணிரை விட விரைவில் காய்வது எதுவுமில்லை.
* இன்பமாயிருக்க இயற்கை எல்லோர்க்கும் வாய்ப்பளிக்கிறது: ஆனால் மக்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.
* காலத்தால் குறையாத துக்கம் எதுவுமில்லை.
* எவருக்கு அளிக்கிறோம் என்பதில் கவனமாயிருக்கவும்.
* பூமியில் தோன்றுபவைகளில் ஆகக் கழிவானது நன்றி கெட்டவன்.
* உயிருள்ளவரை நம்பிக்கையும் உண்டு.
* பயனற்றதைப் பற்றிக் கொண்டிருப்பதை விட, நல்ல நம்பிக்கை மேலானது.
* பாத்திரம் சுத்தமாயில்லா விட்டால், அதில் ஊற்றுபவை எல்லாம் கெட்டுவிடும்.
* பேதைக்குப் புத்திதான் சொல்லலாம், தண்டித்தல் நலமன்று.
* அநேகமாக எல்லா மனிதர்களும் மூடர்களே.
* வேதனையுள்ள உள்ளத்திற்கு இசை மருந்து.
* கலைகளுக்குத் தாய் வறுமை.
* இலக்கியமில்லாத வாழ்க்கை மரணமாகும்.
* தெய்வங்கள் ஒருவனை வெறுத்தால், அவன் ஆசிரியனாவான்.
* காரசாரமான விவாதத்தில் நாம் உண்மையை நழுவவிட்டு விடக்கூடும்.