சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் அ. ஹெப்சிரோஸ் மேரி
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் அ. ஹெப்சிரோஸ் மேரி தமிழ்ப்பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். மேலும், இவர் மொழியியல் பாடத்திலும் முதுநிலைப்பட்டம் (M.A) பெற்றிருக்கிறார். தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் இவரது 57 ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. 18க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகள், 24க்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங்குகள், 4 பயிலரங்குகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் 18 கருத்தரங்கங்கள்/பயிலரங்குகள் போன்றவற்றிற்கு ஒருங்கிணைப்பாளர்/இணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 9 பேர் முனைவர் (Ph.D) பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7 பேர் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
ஒப்பீட்டு நோக்கில் இலக்கியச் சிந்தனைகள், வீரசோழியம் நேமிநாதன் ஒரு பார்வை, தமிழ் வடமொழி இலக்கண மரபு, கி. நாச்சிமுத்து எனும் நான்கு நூல்களை எழுதியிருக்கிறார். மலையாளம் - தமிழ் அகர முதலி (Malayalam - Tamil Dictionary, ISBN 978-81-932971-2-4), பெண்ணியத்தின் புதிய போக்குகள் (Penniyathin Puthiya Pokkukal, ISBN 978-93-81322-37-6), தமிழிலக்கியத்தில் நாழிகைக்காரர்கள், இலக்கணத் தேன்துளிகள், இலக்கியச் சாரல் ஆகிய நூல்களுக்குத் துணைப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார். மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் மாதவிக்குட்டி எழுதிய பாவக்குட்டி, பச்சப்பாட்டு சேலை, பட்டுக்குப்பாயம் மற்றும் பிரியாணி எனும் தலைப்பிலான மலையாளச் சிறுகதை நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அகில இந்திய வானொலி நிலையம், திருவனந்தபுரம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றிருக்கிறார். திருவள்ளுவர் நினைவுப் பரிசு (1994), வெள்ளியம்பலவாணர் நினைவுப் பரிசு (1994), ஆதிலட்சுமி அம்மாள் தங்கப் பதக்கம் (1997), பாரதி தமிழ்ச்செம்மல் விருது (2017) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார்.
முனைவர் அ. ஹெப்சிரோஸ் மேரி (பிடிஎப் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|