இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

கீழக்கல்லூர் புரவு வரி நாதர் கோயில்

உ. தாமரைச்செல்வி


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. அத்தகைய பெருமைக்குரியப் பொருளைச் சேர்ப்பதும், செலவழிப்பதும் சிறப்பாக நடைபெற்றால்தான் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையின் சிறப்புக்கு உதவும் பொருள் வளத்தை வாரி வழங்கும் தலமாகத் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கல்லூர் புரவு வரி நாதர் கோயில் இருக்கிறது.

தல வரலாறு

பிரம்மதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த சபேசபுரத்தில் நெல் விளையக்கூடிய விவசாய நிலங்கள் அதிகமாக இருந்தன. விவசாயத்திற்கு உதவும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களும் சில இடங்களில் இருந்தன. சபேசபுரத்திலிருக்கும் அனைத்து மாடுகளையும் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், மாலையில் அவைகளை அங்கிருந்து ஓட்டி வந்து திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை ஒருவன் செய்து கொண்டிருந்தான்.

அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில் ஒரு பசு மட்டும் தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து செல்வதும், வீடு திரும்பும் மாலை வேளையில் மீண்டும் அந்தக் கூட்டத்தோடு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது. அதைக் கண்ட அவன், அந்தப் பசு தினமும் எங்கே சென்று விட்டுத் திரும்ப வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தான்.


மறுநாள் காலையில், மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளிடமிருந்து அந்தப்பசு மட்டும் பிரிந்து சென்றதைப் பார்த்த அவன், அந்தப் பசுவிற்குத் தெரியாமல் அதைப் பின் தொடர்ந்து சென்றான். அந்தப்பசு ஒரு இடத்தில் போய் நின்று கொண்டு, அங்கிருந்த கல் ஒன்றின் மீது தானாகப் பாலைச் சுரந்தது. மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசு, தானாகச் சுரந்து பாலை வீணாக்குகிறதே என்று நினைத்த அவன், அந்தப்பசுவை நோக்கிச் சிறிய கல் ஒன்றை எடுத்து வீசினான்.

அதனால் அச்சமடைந்த அந்தப்பசு, தான் பால் சுரந்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுக் கீழேயிருந்த கல்லை மிதித்தபடி ஓடியது. அந்தக் கல்லில் பசுவின் கால் பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்கியது. கல்லில் இருந்து வந்த இரத்தத்தைக் கண்டு பயந்த அவன் அங்கிருந்து ஊரை நோக்கி ஓடினான்.

அவன் ஊருக்குள் சென்று, அங்கிருந்த பெரியவர்களிடம் தான் பார்த்ததைச் சொன்னான். ஊர்ப் பெரியவர்கள் அந்த ஊரிலிருந்த மக்களுடன் சேர்ந்து அவன் சொன்ன இடத்தை வந்து பார்த்தனர். அங்கிருந்த கல் சுயம்புலிங்கமாக அவர்களுக்குக் காட்சியளித்தது. அந்தச் சுயம்புலிங்கத்தின் மேற்பகுதியில் பசு மிதித்ததால் ஏற்பட்ட கால் குளம்புத் தடத்திலிருந்து, இரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது.

சுயம்புலிங்கத்தை வணங்கிய மக்கள், அந்த இடத்தில் இறைவனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாகச் சொல்லி வேண்டினார்கள். அவர்கள் வேண்டிய நிலையில், சுயம்புலிங்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இரத்தம் நின்றது. அதன் பிறகு, அந்த இடத்தில் இறைவனுக்குக் கோயில் கட்டப்பட்டது. கோயிலில் இருக்கும் இறைவனைப் பசு அடையாளம் காட்டியதால், அந்த இறைவனுக்குத் தேனுபுரீஸ்வரர் (தேனு - பசு) என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். இந்த லிங்கத்தில் இன்றும் பசு மிதித்ததன் அடையாளமாகப் பசுவின் கால் குளம்புத் தடம் இருப்பதைக் காண முடியும்.


புரவு வரி நாதர்

தற்போது கீழக்கல்லூர், நடுக்கல்லூர், மேலக்கல்லூர், கோடகநல்லூர் என்று அழைக்கப்படும் சில ஊர்களைக் கொண்டிருந்த அன்றைய பிரம்மதேசம் பகுதி இராஜராஜ சோழன் மன்னராக இருந்த காலத்தில், அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. பிரம்மதேசம் பகுதியில் விளைந்த கோடகன் சம்பா என்கிற உயர்வகை நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு மிகவும் ருசியாக இருந்ததுடன் அந்த உணவு சில நாட்கள் வரைக் கெட்டுப் போகாமலும் இருந்தது.

இதனையறிந்த மன்னன், அந்த நெல்லை இறைவழிபாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டான், அவன், இப்பகுதியில் விளையும் நெல்லில் ஆறிலொரு பங்கினைத் தாங்களாகவே கணக்கிட்டு, சபேசபுரத்திலுள்ள (தற்போதைய கீழக்கல்லூர்) தேனுபுரீஸ்வரர் கோயிலில் இருக்கும் இறைவன் முன்னிலையில் அரசிறையாகச் (வரி) செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான்.

இப்பகுதி மக்களும் தாங்கள் விளைவித்த நெல்லிலிருந்து ஒரு பகுதியை அரசிறையாக இந்தக் கோயிலில் இருக்கும் இறைவன் முன்பாகச் செலுத்தத் தொடங்கினர். இக்கோயிலில் அரசிறையாகப் பெறப்பட்ட நெல் திருநெல்வேலி, திருச்செந்தூர், பாபநாசம், சங்கரன்கோயில், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற மன்னனின் ஆட்சிப் பகுதியிலிருந்த பல்வேறு இடங்களில் அமைந்திருந்த கோயில்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை அரசிறையாக வசூலிக்கும் அரசிறைக் கணக்கர் எனும் பணியை இக்கோயில் இறைவனே செய்தமையால் இறைவனுக்குப் புரவு வரி நாதர் (புரவு வரி - அரசிறைக் கணக்கன்) என்கிற புதிய பெயரும் ஏற்பட்டது. இந்தப் புதிய பெயரும் பேச்சு வழக்கில் நாளடைவில் மாற்றமடைந்து, தற்போது புறவேலி நாதர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.


அழகாம்பிகை

இக்கோயிலில் இருக்கும் முன் மண்டபத்தில் இருக்கும் தனிச்சன்னதியில் இறைவனின் துணைவியான அழகாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோயில் வளாகத்தில், யோக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன், நாக கன்னிகைகள், சண்டிகேஸ்வரர், தர்மசாஸ்தா, காலபைரவர், பூதத்தார், மங்கள சனீஸ்வரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சிறிய சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


இக்கோயிலில் பிரதோஷக் காலச் சிறப்பு வழிபாட்டிற்காகப் புரவு வரி நாதர் மற்றும் அழகாம்பிகை ஆகியோர் காளை (நந்தி) ஒன்றின் மேல் நின்ற நிலையில் இருக்கும் வெண்கலச் சிலைகளும் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் முன் பகுதியில் இறைவன் முன்னிலையில் நெல்லை அரசிறையாகப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட சதுரவடிவ வரி தானியச் சிறப்பு மேடை இன்றும் இருக்கிறது.


வழிபாட்டுப் பயன்கள்

* இக்கோயிலில் இருக்கும் இறைவனை வழிபடுபவர்களுக்குப் பொதுவாக, அவர்கள் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்பட்டுப் பொருள் வளம் அதிகரிக்கும். விவசாயம் உள்ளிட்ட உற்பத்தித் தொழிலைச் செய்பவர்கள் உற்பத்தி அதிகரித்து அதிக இலாபம் பெறுவர். இங்கு வந்து வழிபட்டுப் பயனடைந்தவர்கள் இங்கிருக்கும் அரசிறை மேடையில் தாங்களாகவே மனம் மகிழ்ந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களையோ அல்லது அதற்கு இணையான இலாபத்தின் ஒரு பகுதியையோ இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி மேலும் வளமடையலாம்.

* வரிப்பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்களுடைய பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்பட்டு மன மகிழ்ச்சி ஏற்படும்.



* இத்தலத்திற்கு வந்து வழிபடும் வங்கி, காப்பீடு, வருவாய் மற்றும் நிதி நிறுவனப் பணிகளில் இருப்பவர்கள் தகுந்த பதவி உயர்வினையும், நிதி தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள், கணக்காளர் பணிகளில் இருப்பவர்கள் தங்களுடைய தொழிலில் நல்ல வளர்ச்சியையும் பெற முடியும்.

* இக்கோயிலில் இருக்கும் அழகாம்பிகை அம்மன் தெற்கு நோக்கிப் பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்புடையதாகும். இங்கிருக்கும் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்துக் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு என மங்கலப் பொருட்களை அம்மனுக்கு அணிவித்து வழிபாடு செய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் சுகமான குழந்தைப் பிறப்பு கிடைக்கும். திருமணம் முடிந்து நீண்டகாலமாகக் குழந்தை இல்லாமலிருப்பவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். இதுபோல், நீண்ட காலமாகத் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் இங்குள்ள அம்மனை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அமைவிடம்

திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கீழக்கல்லூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து பேட்டை வழியாகச் சேரன்மகாதேவி, முக்கூடல் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளில் செல்லலாம்.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p28.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License