மனித உடலைப் பற்றிய தகவல்கள்

மனிதனின் மூளையானது ஆண்களுக்கு மூன்று பவுண்டு எடையுடையதாகவும், பெண்களுக்கு அதிலிருந்து நான்கு அல்லது ஐந்து அவுன்சு குறைந்தும் காணப்படும்.

மனிதனின் பற்களின் மேலுள்ள எனாமல்தான் நம் உடலில் கனமான பகுதியாகும்.

சராசரியாக 70 வயது வரை வாழும் மனிதன் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 100 டன் உணவினை உட்கொள்கிறான். இது அவனது உடலின் எடையைப் போல் 1250 மடங்கு ஆகும்.

மனிதன் ஒரு நாளில் சராசரியாக 455 கன அடி அளவு காற்றைச் சுவாசித்து வெளியிடுகிறான்.

மனிதனின் சராசரி வயதான 70 ஆண்டுகளில் தூக்கத்திற்கு மட்டும் 23 ஆண்டுகள் போய்விடுகின்றன. பேசுவதில் 13 ஆண்டுகள் போய்விடுகின்றன. உண்பதில் 6 ஆண்டுகள் போய்விடுகின்றன.

மனித உடலில் வெப்பத்தை உணரும் மையங்கள் சுமார் 30 ஆயிரம் உள்ளன.

மனித உடலின் மூக்குநுனி, கைவிரல்கள், கால்விரல்கள், முதுகின் கீழ்ப்பகுதி போன்றவைதான் குளிரை நன்கு உணரக்கூடிய பகுதிகளாகும்.

மனித உடலின் தோலின் மீது வலிமை உணரக்கூடிய மையங்கள் 20 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை உள்ளன.

உடலின் இருபாதிகளில் ஒரு பகுதி மற்றதை விட சிறிது பெரிதாக இருக்கிறது.

சராசரி மனிதனின் உடலில் போர்த்தப்பட்டுள்ள தோலின் பரப்பளவு 6 சதுர மீட்டர்களாக இருக்கின்றது.

மனிதனால் தாங்கிக் கொள்ளக்கூடிய அதிக அளவு உடல் வெப்பம் 111-112-113 டிகிரி பாரன்ஹீட் ஆகும். குறைந்த அளவு குளிர்நிலை 77-80.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

உலக மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இரத்தப் பிரிவு O பிரிவுதான்.

இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தம் உடலில் ஒருமுறை சுற்றி வர 30 வினாடி நேரம் எடுத்துக் கொள்கிறது.

நம் உடலிலுள்ள மொத்த நரம்புகளின் எண்ணிக்கை 72,000.

நம் உடலிலுள்ள தசைகளின் எண்ணிக்கை 440.

மனித உடலில் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன. இவை மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செய்திகளை எடுத்துச் செல்கின்றன.

நம் கண்களால் தலையைத் திருப்பாமலே 320 டிகிரி வரை பார்க்க முடியும்.

நம் உடலின் சிறிய எலும்பு குருத்தெலும்பு.

நம் உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு.

நாம் கோபம் கொள்ளும் பொழுது 50 தசைகளும், சிரிக்கும் போது 15 தசைகளும் இயங்குகின்றன.

மனிதனின் உள்ளங்கையில் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் சுமார் 3000 வியர்வைச் சுரப்பிகள் வரை இருக்கின்றன.

மனிதத் தோலின் கனம் கண்ணிமையில் 1/100 அங்குலமாகவும், முதுகில் 1/5 அங்குலமாகவும் இருக்கிறது.

நம்முடைய உடலின் வெப்பத்தில் 80 சதவிகிதம் தலையிலிருந்தே வெளியேறுகிறது.

சாதாரணமாக 72 ஆண்டுகள் வாழும் ஒரு மனிதனின் இதயம் 3000 மில்லியன் முறை துடிக்கிறது.

பெண்ணின் கருப்பை 9 செ.மீ நீளமும், 5 செ.மீ அகலமும் கொண்டது.

மனித முடியின் பலம் சில உலோகக் கம்பிகளின் பலத்தை விட அதிகமானது. ஈயக்கம்பியின் திறன் சதுர மில்லி மீட்டருக்கு 2.3 கிலோ. துத்தநாகக் கம்பியின் திறன் சதுர மில்லி மீட்டருக்கு 17 கிலோ. பிளாட்டினக் கம்பியின் திறன் சதுர மில்லி மீட்டருக்கு 34 கிலோ. மனித முடியின் பலம் 45.5 கிலோவாக இருக்கிறது.
-தேனி. பொன்.கணேஷ் .
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.