இப்புவியில் மரங்களை நடும் பொழுது, குறிப்பாகத் தோப்பாக நடும் போது ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான், அம்மரங்கள் வழங்கும் பலன்கள் அதிகமாக இருக்கும். இங்கு மரங்களுக்கான இடைவெளி அடிக்கணக்கில் தரப்பட்டிருக்கிறது.
* வேப்பமரம் - 15' × 15'
* பனைமரம் - 10' × 10'
* தேக்கு மரம் - 10' × 10'
* மலைவேம்பு மரம் - 10' × 10'
* சந்தன மரம் - 15' × 15'
* வாழை மரம் - 8' × 8'
* தென்னை மரம் - 24' × 24'
* பப்பாளி மரம் - 7' × 7'
* மாமரம் உயர் ரகம் - 30' × 30'
* மாமரம் சிறிய ரகம் - 15' × 15'
* பலா மரம் - 22' × 22'
* கொய்யா மரம் - 14' × 14'
* மாதுளை மரம் - 9' × 9'
* சப்போட்டா மரம் - 24' × 24'
* முந்திரிகை மரம் - 14' × 14'
* முருங்கை மரம் - 12' × 12'
* நாவல் மரம் - 30' × 30'
இவ்வாறு மரங்களுக்கான இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது. இந்த இடைவெளிகளை விடக் குறைவாக இருந்தால், மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். அதன் பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறியதாக இருக்கும். இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அத்துடன் காய்கள் நன்கு பெருத்து, திரட்சியாகக் காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
மரத் தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும் வகையில் இடைவெளி குறைக்கப்படுகின்றன.